சிரியாவில் ஈரானிய புரட்சிப் படையைக்குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்

/files/24 2020-05-29 19:37:17.jpg

சிரியாவில் ஈரானிய புரட்சிப் படையைக்குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்

  • 2
  • 0

ஈரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு The Israel Defense Forces (IDF) கூறியுள்ளது.

ஆனால் இது குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை. சிரியாவில் உள்ள கோலான் மலை பகுதி உச்சியில் உள்ள இலக்குகளில் இருந்து ஏவப்பட்ட ஒரு ராக்கெட்டை தாங்கள் இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு தெரிவித்தது.

இதேவேளையில், நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவு இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் ஒன்றை முறியடித்துள்ளதாக சிரியாவின் அரசு ஊடகமான சனா குறிப்பிட்டுள்ளது.

சிரியா பிராந்தியத்தில் ஈரானை சேர்ந்த குட்ஸ் படைகளின் இலக்குகள் மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இன்னமும் முழுமையாக தெரிவியவில்லை. இதுவரை சிரியாவில் தாங்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து மிகவும் ஆபூர்வமாகத்தான் இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சாட் நாட்டுக்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, சிரியாவில் மூர்க்கத்தனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஈரான் குழு இலக்காகக் கொள்ளவும், தங்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எவரையும் அழித்திடும் பணியில் ஈடுபடவும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.



Leave Comments

Comments (0)