சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்காக திருச்சியில் புதிய முன்னெடுப்பு

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்காக திருச்சியில் புதிய முன்னெடுப்பு

  • 6
  • 0

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக திருச்சியில் புதிதாக தங்குமிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்டிருக்கும் இந்த தங்குமிடத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான கூடுதல் செயல்திட்டங்களும் உள்ளன.

சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவளிக்கும் 'ஆதலால் காதல் செய்வீர்' எனும் அமைப்பு கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வருகிறது. சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை செய்து வரும் இந்த அமைப்பின் புதிய முயற்சி தான் இந்த பாதுகாப்பிடம்.

ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த தங்குமிடம் திருச்சி அண்ணா நகர் போலீஸ் காலனியில் அமைந்துள்ளது. பாதுகாப்பான இந்த தங்குமிடம் 345 சதுர அடி அளவில் கட்டப்பட்டிருப்பதாக 'ஆதலால் காதல் செய்வீர்' அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் குணசேகர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த தங்குமிடத்தை நாடிவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு சட்ட ஆலோசனை மற்றும் வாழ்வாதாரத்துக்கான உதவிகள் செய்துதரப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Leave Comments

Comments (0)