karuppu - குடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

  • 0
  • 0


சென்னை அசோக் நகரில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 09ஆம் தேதி இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், ”ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தாது” என்று அறிவிக்கப்பட்டது.

மோடி அரசின் இந்த மதவாத திட்டத்திற்குப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பாகத் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வகையில் இன்று (டிசம்பர் 27) சென்னை அசோக் நகரில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Leave Comments

Comments (0)