எழுத்தாளர் சூசன் சோண்டக்கின் பேட்டி!

/files/22 2020-05-29 19:31:04.jpg

எழுத்தாளர் சூசன் சோண்டக்கின் பேட்டி!

  • 1
  • 0


இங்கிலாந்தில் உள்ள செல்சியா நகரில் இருக்கும் ஐந்து அறை கொண்ட பரந்த அபார்ட்மெண்டில் வசித்து வந்தார் சூசன் சோண்டக். அவரது அறை முழுவதும் புத்தகங்களும் தாள்களுமே நிரம்பியிருந்தன. அவரது அறையில் நிச்சியம் 15,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கும். கலை மற்றும் கட்டிடக்கலை, நாடகம் மற்றும் நடனம், தத்துவம் மற்றும் மனோநிலை, மருத்துவ வரலாறு, மதம் குறித்த வரலாறு, புகைப்படக் கலை மற்றும் நெடுந்தொடர் ஆகியவைகள் குறித்து பார்த்தும் படித்தும் தனது நேரத்தை கழித்து வந்தார் சூசன். பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி, ஸ்பெயின், ரஷ்ய, ஜப்பானிய இலக்கியங்கள் யாவும் கால வரிசைப்படி ஒழுங்காக அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் படிக்க வேண்டிய தகவல்களை அந்தந்த புத்தகத்தில் துண்டுச் சீட்டில் எழுதி வைத்திருந்தார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு மறைந்த சூசனிடம் 1994 ஜூலை மாதம் தொடர்ந்து முன்று நாளாக எடுக்கப்பட்ட பேட்டியின் சுருக்கமான வடிவம் இதோ….

நீங்கள் எப்போது எழுத தொடங்குனீர்கள்?

எப்போது தொடங்கினேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் நான் ஒன்பது வயதாக இருக்கும் போதே சுயமாக புத்தகத்தை பதிப்புத்துள்ளேன்; அது ஒரு மாதாந்திர கையெழுத்து பத்திரிக்கை. அருகில் உள்ளோர்களுக்காக சுமார் இருபது பிரதிகள் அச்சிட்டு கொண்டிருந்தேன். பல வருடங்கள் இப்படி நடந்து கொண்டிருந்தன. பெரும்பாலும் அந்த பத்திரிக்கை முழுவதும் நான் வாசித்த புத்தகங்கள் பற்றி எழுதியதாகவே இருக்கும். சில கதைகளும் கவிதைகளும் மற்றும் இரு நாடகங்களையும் எழுதியதாக எனக்கு ஞாபகம் உள்ளது. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், இவை யாவும் நடந்தது 1942,1943,1944 கலகட்டங்களில்.

நீங்கள் தொடர்ச்சியாக சரஜீவோவிற்கு பயணம் செய்தபடி இருந்ததால் பலமுறை இந்த நேர்காணலை தள்ளி வைக்க வேண்டியிருந்தது. உங்கள் வாழ்க்கையிலும் எழுத்துக்களிலும் போர்கள் எப்படி திரும்ப திரும்ப நிகழ்கிறது என்பதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் இது கடுமையான அணுபவம் என என்னிடமே நிங்கள் கூறியுள்ளீர்கள்….

அமெரிக்க குண்டுவீச்சில் தாக்குதலுக்குள்ளான வடக்கு வியட்னாமிற்கு இரு முறை பயணம் செய்தேன். இதை பற்றி Trip to Hanoi புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன். 1973-ம் ஆண்டில் யோம் கிப்பூர் போர் தொடங்கிய போது பிராமிஸ்ட் லேண்ட் (Promised Lands) ஆவணப்பட படப்பிடிப்பிற்காக இஸ்ரேல் சென்றிருந்தேன். எனது மூன்றாவது போர் போஸ்னியா பற்றியது. 

Illness as Metaphor நூலில் ராணுவ உருவகங்கள் குறித்து கண்டனத்தை பதிவு செய்திருப்பீர்கள். The Volcano Lover நாவலின் இறுதிப் பகுதியில் போரின் வக்கிரத்தை அதிர்ச்சி தரக்கூடிய வகையில் கூறியிருப்பீர்கள். நான் எடிட் செய்து கொண்டிருந்த Transforming Vision: Writers on Art என்ற நூலிற்கு ஏதாவது பங்களிப்பு செய்யுங்கள் என்று உங்களிடம் கேட்ட போது கோயாவின் The Disasters of War குறித்து எழுதியிருந்தீர்கள்….

போர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து பயணம் செய்வது மற்றவரகளின் கற்பனைகளில் மட்டுமல்ல, எனக்கே சற்று விசித்திரமாக தோன்றும் – தொடர்ச்சியாக பயணம் செய்யும் குடும்பத்தில் இருந்து நான் வந்திருந்தாலும் கூட. வடக்கு சீனாவில் விலங்கின் முடிகளை விற்பனை செய்து கொண்டிருந்த என் தந்தை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது இறந்தார். எனக்கு அப்போது ஐந்து வயது. 1939-ம் ஆண்டு நான் ஆரம்ப பள்ளியில் நுழைந்த போது, எனக்கு நெருக்கமான தோழியாக இருந்தவள் ஸ்பெயின் குடிமைப் போரில் அகதியானவள். அப்போது தான் முதல் முறையாக “உலகப் போர்” என்ற வார்த்தையை கேட்டேன். 1941-ம் ஆண்டு டிசம்பர் ஏழாம் தேதி அன்று நான் பயத்துடன் இருந்தது இன்றும் எனக்கு ஞாபகம் உள்ளது. “சில காலத்திற்கு வெண்ணெய் கிடைக்காது” என்ற வார்த்தையில் உள்ள “சில காலத்திற்கு” என்ற வார்த்தை தான் நான் முதன் முதலாக மொழி குறித்து சிந்தித்தது. அந்த வார்த்தையில் ஒரு நம்பிக்கையும், புதுமையும் இருந்தது.

Writing Self நூலில் ரொலான் பார்த் குறித்து எழுதும் நீங்கள், ரொலான் பார்த் குழந்தையாக இருந்த போது அவரது தந்தை முதலாம் உலகப் போரில் கொல்லப்பட்டார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அவர் இளைஞராக இருந்தார். ஆனால் தனது எழுத்துகள் எதிலும் அவர் போர் குறித்து எதுவும் எழுதியதில்லை என ஆச்சர்யப்படுகிறீர்கள். ஆனால் உங்கள் எழுத்துக்கள் யாவும் போரின் நினைவுகளையே தங்கியுள்ளது.

நான் கூறிக் கொள்வதெல்லாம், எழுத்தாளன் என்பவன் உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கவனிப்பவனாக இருக்க வேண்டும். 

“எனது கரு போர் மட்டுமே. அழிவு மற்றும் இறப்பு குறித்து ஸ்தூலமான அதிர்ச்சியை வெளிக்காட்டாத எந்த போரும் ஆபத்தான பொய்யே” என Promised Land-ல் எழுதியிருப்பீர்கள். அதை பற்றி…

இந்த கட்டுப்பாடுக்குரிய குரல் என்னை சங்கடப்படுத்துகிறது. ஆனால்….இது உண்மை தான்.

சரஜீவோ முற்றுகை குறித்து எழுதப் போகிறீர்களா?

இல்லை. உண்மையை கூறினால், இன்னும் அதை பற்றி யோசிக்கவில்லை. நிச்சியம் அது கட்டுரையாகவோ செய்தி அறிக்கையாகவோ இருக்காது. எனது மகன் டேவிட் ரீஃப் எனக்கு முன்பாகவே சரஜீவோ சென்று Slaughterhouse என்ற கட்டுரை புத்தகத்தை வெளியிட்டுள்ளான். மேலும் போஸ்னியா இனப்படுகொலை குறித்து எங்கள் குடும்பத்தில் இருந்து எழுதியுள்ள ஒரு புத்தகமே போதும். ஆகையால் சரஜீவோ பற்றி எழுதுவதற்கு நான் நேரம் ஒதுக்கப் போவதில்லை. இப்போதுள்ள நிலைமையில், நான் எழுதியதே போதும் என்று எண்ணுகிறேன். எனைப் பொருத்தவரை, சரியான செயல்களை நம்புவதே மனிதனின் கடமையாகும், எழுத்தாளரை பின்பற்றுவது அல்ல.

Leave Comments

Comments (0)