எழுச்சி பெறும் தலித் இசை

/files/21 2020-05-29 19:27:29.jpg

எழுச்சி பெறும் தலித் இசை

  • 13
  • 0

சென்ற வருடம் டிசம்பர் 31ம் தேதி,கபீர் சாக்யாவும் அவரது குழுவான Dhamma Wings யும் மகராஷ்டிராவின் பீமா கோரிகானில் பெரும் மக்கள் கூட்டத்தினருக்கு நடுவே இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார்கள்.சாக்யாவிற்கு அது பெருமிதமான தருணம்.1818ம் ஆண்டு பிரிட்டிஷ் படையோடு இணைந்து பெஷாவார்களை தோற்கடித்த தலித் மஹர் வீர்ர்களை புகழும் இரு கதைப் பாடல்களை சாக்யா அந்நிகழ்ச்சியில் வெளியிட்டார்.பீமா கோரிகானில் பேரணியாகச் சென்ற தலித்கள் மீது நடைபெற்ற தாக்குதலை அடுத்த நாள் காலை தெரிந்து கொண்ட சாக்யா, “இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது,நடந்ததெல்லாம் போதும்” என ஆவேசமாக கூறுகிறார்.

மும்பையைச் சேர்ந்த கணினி அறிவியல் பட்டதாரியான சாக்யா,மூன்று மாதங்கள் புத்த துறவியாக புத்தகயாவில் தங்கியிருந்துள்ளார். “நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை.பாகுபாட்டை பரப்புபவர்களுக்கு எதிராகவே எங்களது குரல் ஒலிக்கிறது” என்கிறார் சாக்யா.இந்த ‘புத்த’ ராக் குழுவினர்,Buddhang Namami,Prabuddha Ho Manava போன்ற பல சிறப்பான பாடல்கள் இயற்றியிருந்தாலும்,அவர்களின் முதல் பாடலான ஜெய் பீம் சே பாடலே மிகவும் புகழ்பெற்றது.இப்பாடல் நமது அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கருக்கான சிறிய அஞ்சலி ஆகும்.

நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகளை வைத்து Democracy Zindabad என்ற தனிப் பாடலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.தாங்கள் அடைந்துள்ள பெரும் புகழ் காரணமாக இந்தியாவின் முதல் ‘தலித் ராக் இசை குழு’ என .தங்களை அடையாளப் படுத்துவதை விரும்பாத சாக்யா, “எங்கள் குழுவில் அனைத்து ஜாதியினரும் உள்ளனர்.உயர்ஜாதி திரைப்பட இயக்குனர் ஒருவர் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ஆவணப்படம் எடுத்தால் அவரை ‘தலித் இயக்குனர்’ என்றா அழைப்பீர்கள்?ஒன்று ஜாதியத்திற்க்கு எதிராக போராடும் அனைவரையும் ‘தலித் கலைஞர்கள்’ என அழையுங்கள் அல்லது இரட்டை நிலை எடுப்பதை நிறுத்தி கொள்ளுங்கள்”.

தங்களது இசையின் மூலமாக ஜாதிக்கு எதிராக போர் தொடுக்கும் பல இளைஞர்களில் சாக்யாவும் ஒருவர்.ஒரு காலத்தில் இது போன்ற குரல்களை எல்லாம் எதிர்ப்பு குரல் என ஒதுக்கிய நிலை மாறி இன்று இவர்களின் பாடல்கள் பெருவாரியான மக்களிடமும் வர்த்தக மதிப்பும் பெறுகின்றன.

பஞ்சாப்பை சேர்ந்த 18 வயதேயாகும் கின்னி மகி,வளர்ந்து வரும் யுடுயூப் நட்சத்திரம்.இவரின் Guran Di Deewani ஆல்பமும் Danger Chamar பாடலும் பெரும் புகழ்பெற்றது.தனது ராப் பாடல்கள் மூலம் புத்தர்,அம்பேத்கர்,குரு ரவிதாஸ்(பக்தி இயக்கத்தை சேர்ந்த சமூக சீர்த்திருத்தவாதி) கருத்துகளை பரப்பும் மகி,தாள நயத்தோடு கவர்ந்திழுக்கும் வகையில் தன் தலித்திய அணுபவங்களை கலந்து தனது பாடலை அமைக்கிறார்.தான் பாபாசாகேப் அம்பேத்கரின் மகள் என பெருமையாக கூறிகொள்கிறார் மகி.

அரசியல் முதிர்ச்சி கொண்ட திராவிட மண்ணில் ஜாதி எதிர்ப்பை பற்றி கேட்க வேண்டியதில்லை.இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் கலாச்சார அமைப்பும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸும் இணைந்து The Casteless Collective என்ற இசை கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர்.இவர்களின் முதல் நிகழ்ச்சி ஜனவரி மாதம், சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது.5000க்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில்,அம்பேத்கர் வாழ்வைப் பற்றியும் நிகழ்கால சமூக பிரச்சனைகள் பற்றியதுமான பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. “எந்த நட்சத்திர பலமும் இல்லாத சுதந்திர இசை குழு இவ்வுளவு வரவேற்பை பெறுவது இதற்கு முன் நடந்தேயில்லை” என்கிறார் The Casteless Collective இயக்குனரான தென்மா.ஜாதியை பற்றி பொது சமூகத்தில் வெளிப்படையாக பேசினால் மட்டுமே இந்த நோய்கூறை ஒழிக்க முடியும் என ரஞ்சித் நினைக்கிறார்.

இவர்களின் இசை,ராப்,ராக் மற்றும் கானா(சென்னையின் ஒடுக்கப்பட்ட மக்களின் கலை வடிவமகவும் இறப்பு நிகழ்ச்சியில் பாடப்படும் இசை வடிவமாகும்) ஆகியவற்றின் கலவையாக உள்ளது.சென்னை மக்களின் தொலைந்து போன வாழ்க்கையை கூறும் கானா,இம்மண்ணின் இசையாகும்.இந்த இசை நிகழ்ச்சிக்காக 100க்கும் மேற்பட்ட கானா பாடகர்களிடம் தேர்வு நடத்தியதாக கூறும் தென்மா, “கானாவும் ராப் இசையும் ஒரே உணர்ச்சிகளிருந்தே வெளிப்படுகிறது.இது உழைக்கும் வர்கத்தின் இசை.இந்த வகையான இசையில் எந்த ஒழுங்குமுறையும் இன்றி பல மணி நேரம் கூட இசை தாளங்கள் நீடிக்கும்.இங்கு வடிவத்தை விட கதை சொல்லும் பாங்கே முக்கியம்” என்கிறார்

கேராளிவில் எழுச்சியின் ஓசையும் சுயமரியாதையும் வேறு வகையில் உள்ளது.இங்குள்ள ராக் மெட்டல் குழுவான வில்லுவண்டி(இதன் பெயர் சமூக சீர்த்திருத்தவாதி மகாத்மா அய்யன்காளி வில்லுவண்டியில் பயணம் செய்த சம்பவத்தை குறிக்கிறது)அக்காலத்தில் கேரளாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பொது பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.இதனை மறுத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அய்யன்காளி,1893ம் ஆண்டு தெருவில் மாட்டு வண்டியில் சென்றார்.இதனை ‘வில்லுவண்டி யாத்ரா’ என கேராளாவில் கூறுகிறார்கள்.அய்யண்காளியின் வழித்தோன்றலாக தங்களை கூறிக்கொள்ளும் இக்குழுவினர்,தங்களின் பாடல்கள் மூலமாக நீதியையும்,சுதந்திரத்தையும் அறிவொளியையும் பரப்புவதாக கூறுகிறார்கள்.ஸ்ரீ நாராயன குரு,பண்டித் கருப்பன்,அம்பேத்கர்,சகோதரர் அய்யப்பன்,புத்தர் ஆகியோரின் சிந்தனைகள் எங்களுக்கு உந்துசக்தியாக உள்ளது என இக்குழுவின் நிறுவனர் சேது கூறுகிறார்.இவர் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் மூண்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர்களின் என்ற பாடல் அம்பேத்கருக்கு சமர்ப்பனமாகவும் மற்றொரு பாடலான நஜீப்,ஜவர்கலால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் தொலைந்து போனதை பற்றி கூறுகிறது.

மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி இசையமைப்பாளர்களிடமும் கலைஞர்களிடமும் இருப்பதாக கூறும் சேது,ஜிமி ஹெண்டிரிக்ஸ் மற்றும் ஜான் லெனானின் இசை ஐரோப்பிய புத்துணர்ச்சிக்கு உதவி புரிந்ததாக கூறுகிறார்.அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய இடமான நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் பெரும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாட வேண்டும் என்பதே தன் மிகப்பெரும் ஆசையாக இந்த இளைஞர் கூறுகிறார்.

“பீமா கோரிகானில் நடந்த சம்பவங்கள்,நாங்கள் பாடுவதை நிறுத்த கூடாது என்பதை சுட்டி காட்டுகிறது.சுதந்திர இந்தியாவில் நடப்பவற்றையே நாங்கள் பாடி வருகிறோம் எனபது இதன் மூலம் நிரூபனமாகிறது” என சாக்யா கூறுகிறார்.

Leave Comments

Comments (0)