karuppu - எதிர்ப்பில் பிறந்த இசை

எதிர்ப்பில் பிறந்த இசை

  • 0
  • 0

 உலகில் உள்ள ஹிப்-ஹாப் ரசிகர்கள் அனைவரும் மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.காரணம் அவர்களின் நாயகன் கெண்ட்ரிக் லாமர் ராப் இசைக்காக புலிட்சர் விருது வாங்கியிருக்கிறார்.ஒரு காலத்தில் ஆபாசக் குப்பை என்று கூறப்பட்ட ஹிப்-ஹாப் இசை,இந்த 45 வருடங்களில் பல எதிர்ப்புகளையும் கொந்தளிப்பான காலகட்டத்தையும் கடந்து வந்துள்ளது.ஹிப்-ஹாப் என்பதே ஒரு எதிர்ப்புணர்ச்சியின் வடிவம் தானே.
எதிர்ப்புகளும் வெற்றிகளும்
     ஹிப்-ஹாப்பின் ஆரம்ப காலகட்டம் 1970களில் பிரோஸ் நகரத்தில் தொடங்கியது.ஆரம்பத்தில் ராப் இசையின் ‘’ஒலிநயத்தோடு கதைசொல்லும்’’ முறையிலான பாடல்கள் பெரிதாக மக்களை ஈர்ககவில்லை.ஆனால் ஹிப்-ஹாப் கலாச்சாரம் நாங்கு முக்கிய கூறுகளை கொண்டது.அவை,பின்பாட்டு,சுவரோவியம்,பிரேக்-டான்ஸ் மற்றும் 
ஆனால் இன்று ராப் இசை தான் ஹிப்-ஹாப் கலாச்சாரத்தின் முகமாக செயல்படுகிறது.1970களின் ஆரம்பத்தில் கருப்பு கலை இயக்கிய அமைப்பின் அரசியல் கவிஞர்கள்,குறிப்பாக கில் ஸ்காட் ஹெரான் போன்றோர் தங்களது எதிர்ப்பினை ராப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
 சுகர்ஹில் கேங்கின் பாடலான ‘ராப்பர்ஸ் டிலைட்’டின் வெற்றி ராப் இசைக்கு ஒரு அடையாளத்தை பெற்று கொடுத்தது.பின் பல ராப் படல்கல் பில்போர்ட் ஹாட் 100ல் இடம்பெற்றன.1982ல் வெளியான “த மெசேஜ்’’ எனுல் பாடல் ராப்பின் முதல் அரசியல் பாடலாகும்.ராப் இசை பாடல்கள் வறுமையின் கோரத்தை,அடிமைத்தனத்தை பற்றி கூறினாலும் அதன் பல வரிகளில் பெண் வெருப்பும் வன்முறையும் மிகுந்துள்ளன.ராப் இசையின் புகழ் வளர வளர எதிர்ப்புகளும் மிகுதியாயின
1993ல் கால்வின் பட்ஸ் எனும் மதபோதகர் ராப் இசைக்கு எதிராக ஒருங்கினைத்த போராட்டத்தில் பல பேர் ராப் பாடல்கள் அடங்கிய சி.டிகளை உடைத்து எறிந்தனர்.”ராப் இசை பாடகர்கள் குண்டர்களையும்,கற்பழிப்பவர்களையும்,போதை மருந்து வியாபரிகளையும் புகழ்ந்து பாடி இளைய சமூகத்தினரை சீரழிக்கின்றனர்" என ஆப்ரிக்க-அமெரிக்க அரசியல்வாதி டிலோரஸ் டக்கர் கூறுகிறார்.பல சமயங்க்களில் ராப் பாடல்கள் நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்டும்,தடை செய்யப்பட்ட பாடல்களைப் பாடிய பாடகர்கள் சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர். 

Leave Comments

Comments (0)