இந்தியாவிற்கும் பரவிய பேரிழப்பை ஏற்படுத்தும் பூச்சியினம்

/files/7806b499-1ea4-4786-ae16-0f611a47fef6 2020-06-06 11:01:58.jpg

இந்தியாவிற்கும் பரவிய பேரிழப்பை ஏற்படுத்தும் பூச்சியினம்

  • 0
  • 0

உலகமயமாதல் என்ற வார்த்தை கேட்பதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே எளிமையான ஒன்றாக உள்ளது. ஆனால், அவற்றின் மூலம் எவ்வளவு பேரிழப்புகள் நிகழ்கின்றன என்பதை பற்றி கணக்கிட்டால் அது எண்ணிலடங்காது. 
குறிப்பாக உணவுப்பொருட்கள் அல்லது வேறு ஏதேனும் உற்பத்திப் பொருட்களை வர்த்தக பரிமாற்றம் செய்வதால் பலவிதமான புதியப் பொருட்கள் நமக்கு அறிமுகமாவது மட்டுமல்லாமல் நம் உடல் நலத்திற்கும், நம்முடைய உணவிற்காக நாம் சார்ந்து இருக்கும் பயிர் வகைகளுக்கும் பல விதமான நோய்களும் புதியனவாக அறிமுகமாகின்றன என்பதை பற்றி, உலகமயமாதலால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்ற நோக்கில் செயல்படும் அரசாங்கமோ அல்லது பல வணிக நிறுவனங்களோ கண்டுகொள்வதில்லை.
வர்த்தக பரிமாற்றத்திற்காக அயல் நாடுகளுடன் நாம் பயன்படுத்தும் கொள்கலன்களின் மூலம் பலவிதமான நோய்க் கிருமிகள் மற்றும் தேவையற்ற விதைகள், பூச்சிகள் என எவற்றையும் கண்டுகொள்ளாமல் இறக்குமதியை மட்டுமே குறியாகவும் கொண்டு செயல்பட்டதன் மூலம் பரவிய பார்த்தீனியம், ஆகாயத் தாமரை யிர் உற்பத்தியில் ஏற்கெனவே, பேரிழப்புகளை நிகழ்த்தி உள்ளது.
ஒரு பட்டியலிடும் அளவிற்கு தீங்குகள் அயல்நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு கிடைத்திருக்கும் வரிசையில், தற்போது ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து ஆசிய கண்டத்திற்கு பரவிய பூச்சியினமானது கடந்த ஜீலை மாதம் கர்நாக மாநிலத்திலும் பரவியுள்ளது. இந்த பூச்சியினத்தின் பெயரானது ஃபால் ஆர்மிவோர்ம் என்றழைக்கப்படுகின்றது.
 இந்த பூச்சியினமானது மிகப்பெரிய பாதிப்புகளை பயிர்களில் ஏற்படுத்தக்கூடியதாகும். இந்த பூச்சியின் அறிவியல் பெயர் ஸ்போடாப்டீரா ஃபிரகிபெர்டா. (Spodoptera frugiperda) இவை வட அமெரிக்காவைச் சேர்ந்த பூச்சியினமாகும். 
 அமெரிக்க மக்காச்சோளத்தில் 2016-ம் ஆண்டு இப்பூச்சியின் தாக்கியதலால் அந்நாட்டின் விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்த பூச்சியினமானது ஆப்பிரிக்க நாடுகளுக்கும் 2016-17 ஆண்டுகளில் பரவியதால் அந்நாட்டின் முக்கியமான உணவான மக்காச்சோளத்தின் உற்பத்தியில் பேரிழப்பை ஏற்படுத்தியதன் மூலம் கிட்டத்தட்ட 30 கோடி மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணியாகவும் இந்த பூச்சியினம் இருந்துள்ளது. தற்போது இந்தியாவிற்கு ஏதோ ஒருவகையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றே கூறலாம். 
 ஆரம்பத்தில் இப்பூச்சியானது கர்நாடகத்தில் பரவியபோது இந்தியாவை சேர்ந்த ஏதோ ஒருவகையானதாக நினைத்த அறிவியல் வல்லுநர்கள் இவற்றின் தாக்கத்தினை கண்டு பெங்களூரில் உள்ள டி.என்.ஏ பரிசோதனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பியதன் மூலம், இவற்றை அமெரிக்க பூச்சியினமான ஃபால் ஆர்மிவோர்ம் என்று உறுதி செய்துள்ளனர். 
இப்பூச்சியின் தாக்கமானது கர்நாடக மாநிலமான சிக்கப்பல்லூரில் முதலில் காணப்பட்டது. பின்னர், 7-9 மாவட்டங்களில் அதிவேகமாக பரவியுள்ளன. இப்பூச்சியானது 20-25 நாட்கள் தொடர்ந்து ஒரு பயிரை தாக்குவதன் மூலம், பயிரின் முழு உற்பத்தித் திறன் குறைவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. தற்போது மக்காச்சோளத்தில் மட்டுமே பரவியுள்ள இப்பூச்சியினத்தை அழிப்பதற்கு இயற்கையாக உள்ள மற்ற பூச்சியினங்களை கொண்டும் அழிக்கலாம் அல்லது பல இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கொண்டும் அழிக்கலாம். ஆனால், தற்போது இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு முயற்சியும் பளிக்கவில்லை. அதிவேகமாக பரவிக் கொண்டு இருக்கும் இந்த பூச்சியினமானது இலையுதிர் காலத்தில் பரவக்கூடிய ஒன்றாகும். இவற்றின் வாழ்நாளானது 25-40 நாட்களாகும். பெண்பால் பூச்சியானது மொத்தம் ஆயிரம் முட்டைகளை கூட தன் வாழ்நாளில் இடும் திறன் கொண்டதாகவும் கருதப்படுகின்றது. இவை முக்கிய பயிர் வகைகளாக ஏறத்தாழ 70-80 பயிர்களையும் தாக்கும் திறன் கொண்டது. தற்போது இவற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் மற்றும் பூச்சியியல் துறை பணிகளை மேற்க்கொண்டு வருகின்றது. 

Leave Comments

Comments (0)