கொழுப்பெனும் நண்பன்-24

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன்-24

  • 2
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

பேலியோ உணவு முறையை எடுப்பவர்கள் செய்யும் அன்றாடத் தவறுகள் மற்றும் அவற்றை சரிசெய்ய பத்து அறிவுரைகள் அடங்கியதே இந்த வார "கொழுப்பெனும் நண்பன்"  பகுதி 

1.முடிந்த வரை அடிப்படைகளை அறிந்து பேலியோவை ஆரம்பிக்க வேண்டும்  

அடிப்படைகளை கட்டாயம் தெரிந்து கொண்ட பின்பே டயட்டுக்கு வர வேண்டும் .பலரும் அடிப்படை தெரியாமல் எடை குறைப்பு டயட் என்று மட்டும் இந்த டயட்டை அணுகுவது தவறு. 

முக நூலில் உள்ள " ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தில் உள்ள பதிவுகளை படித்து தெளிவு பெற வேண்டும். பேலியோ குறித்து குழுமம் வெளியிட்டுள்ள புத்தகங்களை படித்து பயன் பெறலாம். 


2.ரத்த பரிசோதனை   

டயட்டுக்கு முன்பு நிச்சயம் ரத்த பரிசோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும். பலரும் தாங்கள் நார்மலாக இருப்பதாக கனவு கொண்டிருப்பர். ஒரு ரத்த பரிசோதனை செய்தால் தான் தெரியும். நமக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை பற்றி அறிய உதவும்  ஆனால் பலரும் எந்த பரிசோதனையும் இன்றி டயட்டில் இறங்கிவருவது சரியன்று 

3.டயட்டை மாற்றாமல் கடைபிடிப்பது 

தங்களுக்கு கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டை சிறிதும் மாறாமல் கடைபிடிக்க வேண்டும். ஐந்து முட்டை சாப்பிட சொன்ன இடத்தில் இரண்டு முட்டை சாப்பிடுவதும் தவறு.. 300 கிராம் இறைச்சி சாப்பிட சொன்ன இடத்தில் ஒரு கிலோ கறி உண்பதும் தவறு.. 

3.ஃபாலோ அப் ( பின் தொடர்ச்சி) 

டயட்டை எடுக்க ஆரம்பித்த ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறையேனும் மீண்டும் ரத்த பரிசோதனை எடுத்து , முன் பின் நேர்ந்த மாற்றங்களை கலந்தாலோசிக்க வேண்டும். பலரும் எந்த ஃபாலோஅப்பும் செய்வதில்லை 

4.சீட்டிங்

சிலர் 80% சீட்டிங் #பேலியோ .. 90% சீட்டிங் பேலியோ என்று தமக்கு ஏற்றவாறு டயட்டை வளைத்து கொள்கின்றனர் .இது தவறு. பேலியோ டயட்டில் எப்போதாவது சீட்டிங் இருக்கலாம். ஆனால் எப்போதுமே சீட்டிங் என்றால் எப்படி ? சிலர் திருமணங்களில் மட்டும் சீட்டிங் செய்கிறேன் என்கிறார்கள். சரி.. ஒரு மாதத்திற்கு எத்தனை திருமணங்கள் செல்கிறீர்கள் ? என்று கேட்டால்... வாரம் இரண்டு திருமணங்கள் வீதம் எட்டு திருமணங்கள் செல்கிறேன் என்கிறார்கள்.  

Leave Comments

Comments (0)