வானிலை போர் : நிழலா? நிஜமா? பகுதி -9

/files/detail1.png

வானிலை போர் : நிழலா? நிஜமா? பகுதி -9

  • 6
  • 0

- ஷாஜு சாக்கோ 

வானிலை பேரழிவுகளை உருவாக்கவல்ல வானிலை போரின் அதிபயங்கர ஆயுதம் ஹார்ப் (H.A.A.R.P  High Frequency Active Auroral Research Program  ).  ரொசாலி பெர்டெல் (Rosalie Bertell) என்ற அமேரிக்க விஞ்ஞானி 1996ல் ஹார்ப் ஒரு ராணுவ போர் கருவி என்று எச்சரித்தார்.   இரான், பாகிஸ்தான், ஹாய்டி, துருக்கி, க்ரீஸ் மற்றும் பிலிப்பைன்ஸில் நடந்த பல புயல் மற்றும் வானிலை அழிவுகளுக்கு ஹார்ப் தான் காரணம் என்ற சந்தேகம் பல காலமாக  நிலவுகிறது. 

அமேரிக்க அரசாங்கம் ஹார்ப் அயனாஸ்பியர் ( Ionosphere) பற்றிய ஆராய்ச்சி திட்டம் மட்டுமே என்று சொன்னாலும் அறிவியலாளர்கள் ஹார்ப் அயனால்ஸ்பியரை வெப்பப்படுத்தி புயல், வெள்ளம், நில நடுக்கம் போன்றவைகளை ஏற்படுத்தும் வானிலை போர் ஆயுதம் என்று  கூறுகிறார்கள். இதை பற்றி ஊடகங்கள் பல வருடங்களாக‌ எழுதி வருகிறது. ஹார்ப் பற்றி புத்தகங்களும் ஆவணப்படங்களும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

                                               alt text

சென்ற வார  பகுதி 8ல்  சொன்னது போலவே இஎல்எஃப் அலைகளை தான் இதற்கு பயன்படுத்துகிறார்கள். ஊபர் (Woofer) ஸ்பீக்கரில் வரும் அலைகளை ஒத்தது இது.   ஊபர் ஸ்பீக்கரில் வரும் அலைகளை கேட்க முடியாது உணரத்தான் முடியும். அதை போன்றது தான் இந்த  இஎல்எஃப் அலைகள்.  இந்த ரேடியோ அலை கதிர்வீச்சின் சக்தி சுமார் நூறு கோடி வாட்ஸ் ஆகும்.  எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு எஃப் எம் ரேடியோ ஸ்டேஷன் பயன்படுத்தும் ரேடியோ ஆன்டனா ஐம்பதாயிரம் வாட்ஸ் மட்டுமே ஆகும்.  
படத்தில் காண்பது போன்ற பல ஆன்டனாக்களின் கூட்டம் மூலம்  இஎல்எஃப் (ELF   Extremely low frequency )  அலைகளை ஒருமுகப்படுத்தி வளிமண்டலத்தின் அயனாஸ்பியரை  வெப்பப்படுத்துவதாக  கூறப்படுகிறது.   போர் காலங்களில் எதிரியின் தகவல் தொடர்பு சாதனங்களை செயலிழக்க செய்யவும் இந்த ஆன்டனாக்களால் இயலுமாம்.   
 
1993ல்  ஹார்ப் ஸ்டேஷனை அலாஸ்காவில் நிறுவியது அமேரிக்கா.   இதன் மூலம் உலகின் எந்த இடத்திலும் பஞ்சம், புயல், வெப்பம், வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.   பயங்கரமான சூறாவளியின் ஆற்றலை குறைத்து அழிவுகளை தடுக்கவும் இந்த தொழில் நுட்பத்தால் முடியும் என்றாலும் பெரும்பாலும் இது ஒரு நாட்டை கெடுக்கவும் அதன் மீது போர் தொடுக்கவும் அந்த நாட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் தான் இது பயன்படும். 

                                                                       alt text

இந்த அயானாஸ்பியரை வெப்பப்படுத்தும் ஸ்டேஷனால் பூமியின் இன்னொரு பகுதியில் இருக்கும் எதிரி நாட்டின் வளிமண்டல அடுக்கான அயனாஸ்பியரை வெப்பப்படுத்தி வானிலை பேர‌ழிவுகளை ஏற்படுத்த முடியும்.  இந்த ஆராய்ச்சியை அமேரிக்க ராணுவம் 1990லேயே தொடங்கி விட்டது. 

இந்த ஹார்ப் தொழில் நுட்பத்தால் பூகம்பங்களை கூட வரவழைக்க முடியும் என்பது அதிர்ச்சியான உண்மை. 2001ல் கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஏம்ஸ்  (Ames Research Center) ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ரிக்டர் அளவில் 5   அல்லது அதற்கு மேல் இருக்கும் பூகம்பங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் ஒரு ஒற்றுமையை கண்டுபிடித்தார்கள்.  இந்த பூகம்பங்கள் எல்லாம் நிகழ்வதற்கு முன் அயனாஸ்பியரில் மின்காந்த இடையூறுகள் நிகழ்ந்ததை கண்டறிந்தனர்.   

 2011ல்  ஜப்பானில் கிட்டத்தட்ட பதினாறாயிரம் மக்களின் உயிரை காவு வாங்கிய மிக சக்தி வாய்ந்த (ரிக்டர் அளவில் 9.0)  பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து வந்த சுனாமியும் நிகழ்வதற்கு முன்பும் அயனாஸ்பியரில் மின்காந்த அலைகள் வழக்கத்திற்கு மாறாக ஒழுங்கற்று இருந்ததாக பதிவாகியுள்ளது. அயனாஸ்பியரில் ஏற்படும் மின் மாற்றங்களை கணக்கிட்டு  பூகம்பங்கள் நிகழக்கூடிய இடம் மற்றும் அளவை  முன்கூட்டியே கண்டறிய முடியுமா என்ற ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அதைப்போலவே அயனாஸ்பியரில் மின் காந்த ஒழுங்கின்மையை ஏற்படுத்தி பூகம்பங்களை உருவாக்கவும் ஆராய்ச்சிகள் நடக்கிறது.
alt text

பூமிக்கடியில் அழுத்தப்படும் பாறைகள் கூட ஒரு கார் பேட்டரியை போன்று மின்னூட்டம் பெறும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   அழுத்தப்படும் பாறைகள் நேர்மறை மின்சக்தியை பெறுகிறது.  பின் அதனால் ஏற்படும் மின் இடையூறுகளால் பூகம்பம் நடைபெறுவற்கு முன் பாறை வெடிப்பு, தீப்பொறி போன்றவைகள் நிகழ்கிறது. இது போன்ற மின் காந்த அலைகள் வளிமண்டலத்திற்கு பரவவும் வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானி  Friedemann Freund தெரிவிக்கிறார். ஆனாலும் அதன் வழிமுறைகள் இன்னும் புதிராகவே உள்ளன. பூமியில் இருந்து  முப்பது மைல்களுக்கு மேல் வளிமண்டலத்தில்  நடக்கும் மாற்றங்களுக்கும் பூமிக்கடியில் நடக்கும் மாற்றங்களுக்கும் தொடர்புண்டு என்பது விந்தையான விஷயம் தான்.
alt text  
வளர்ந்து  வளரும் பல நாடுகளும் இதை ஆராய்ச்சி செய்கின்றன.  ஹார்ப் போன்ற  அயனாஸ்பியர்  அடுக்கை ஆராய்வதில் இன்று அமேரிக்கா மட்டுமின்றி பல நாடுகளும் ஈடுபடுகிறது. இன்று உலகெங்கும் அயனாஸ்பியரை வெப்பப்படுத்தும்  ஸ்டேஷன்கள் உள்ளன.   

alt text

இந்தியாவில் திருப்பதியில் அமைந்துள்ள (NARL  National Atmospheric Research Laboratory) கூட ஹார்ப் போன்ற ஒரு அயனாஸ்ப்யர் ஆராய்ச்சி மையம் தான்.   அதன் இணையதளம் தான் மேலே உள்ள படத்தில் இருப்பது. அந்த மையத்தில் நிறுவப்பட்டுள்ள ஆன்டனாக்கள் தான் இன்னொரு படத்தில் நீங்கள் காண்பது.   NARL  இணையதளத்தில் அயனாஸ்பியரை ஆராய்ச்சி செய்வதாக தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற  வளிமண்டல ஆராய்ச்சி மையங்கள் ஆராய்வது வானிலை போருக்கான‌ ஆயுதம் என்று நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை. எதிரி நாடுகள் நம் வளிமண்டலத்தை வெப்பப்படுத்துவதை முன் கூட்டியே கண்டறியவும் இது போன்ற ஸ்டேஷன்களை பல நாடுகள் நிறுவி வருகிறது.

alt text

மனிதனுக்கு  படைப்பதை விட அதிக மகிழ்வை தருவது  அழிப்பதில் தான் என‌ உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.  கேரளா வெள்ளம் போன்ற ஒரு அழிவு நடக்கும் போதெல்லாம் இன்னும் அதிக அழிவு வருவதாக‌  புரளிகளும் செய்திகளும் உலாவுவதன் பின் இருக்கும் உளவியல் அது தான். பரிணாம உளவியலாளர்கள் சொல்வதும் மனிதர்களின் மரபணுவிலேயே சுயநலம் இயற்கையாகவே இருக்கிறது என்பது தான்.  கூட்டமாக சேர்ந்து தங்களிடம் இருப்பதை யாருக்கும் விட்டு கொடுக்காமல் இருக்க போரிடும் குணமும் மனிதர்களின் மரபணுவிலேயே  இருக்கிறது. இந்த குணம் தான் அவனை அழிவுக்கான ஆயுதங்களை உருவாக்கிக்கொண்டே இருக்க வைக்கிறது. 
வாள், கத்தி போன்ற போர் கருவிகளை கொண்டு சண்டையிட்டு கொண்டிருந்த நாம் அணு ஆயுத போர் வரை  நிகழ்த்தி காட்டி விட்டோம். அது போலவே வானிலையை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களும் இன்று வானளாவி வளர்ந்து நிற்கிறது. இதன் அதீத சக்தியை அடுத்த‌ உலக போரில் பார்க்க வேண்டி வருமா அல்லது வானிலை போர் ஏற்கனவே தொடங்கி விட்டதா ? என்பது புரியாத புதிராகவே உள்ளது.  நிகழும் பூகம்பம், வெள்ளம் போன்ற நிகழ்வுகளுக்கு நம் எதிரி நாடு காரணமா போன்ற கேள்விகளுக்கும் சாமானியனான என்னிடம் பதிலில்லை.  

முற்றும்.. 
தொடர்ந்து படித்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். 

Leave Comments

Comments (0)