வானிலை போர்: நிழலா நிஜமா?  பகுதி : 5

/files/detail1.png

வானிலை போர்: நிழலா நிஜமா?  பகுதி : 5

  • 2
  • 0

-ஷாஜீ  சாக்கோ

மின்னலை மின்னலின் சக்தியை போர்களில் பயன்படுத்த முடியுமா என்பது  பற்றியும் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.  க்ரேக்க கடவுள் ஷூஸ்  ( Zeus ) ஐ போல் மனிதனும் தன் கையில் மின்னலை பிடித்து அதை ஆயுதமாக பயன்படுத்த ஆசைப்படுகிறான்.   

அதிபயங்கரமான ஆயுதமாக மின்னல் உருவெடுத்து விட்டது. இது நாளைய போர்களத்தில் பயன்படுத்தப்படக்கூடும்.
 
அதைப்பற்றி விரிவாக பார்ப்பதற்க்கு முன் மின்னலைப்பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.  மின்னூட்டம் பெற்ற மேகங்களால் தான் மின்னல் உருவாகிறது.  

alt text

 உராய்வின் மூலம் பொருட்கள்  நிலைமின்னியல் (Static Electricity) பெறுவது போலவே மேகங்களில் இருக்கும் சிறு சிறு பனித்துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் மின்னூட்டம் பெறுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதன்  வழிமுறைகள் முழுமையாக கண்டறிய‌ப்படவில்லை.  

மேகங்களின் மேல்மட்ட பகுதி பாஸிட்டிவ் மின்னூட்டத்தையும் நடுப்பகுதி நெகட்டிவ் மின்னூட்டத்தையும் பெறுகிறது.  எதிரெதிர் மின்னூட்டம் கொண்ட மேகங்கள் அருகே வரும் பொழுது, மின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னூட்டம் பாயும் பொழுது ஒளிக்கீற்று உருவாகிறது.  
 
ஆனால் மின்னல் உருவாக எது முதல் காரணியாக இருக்கிறது என்பதும்   புதிராகவே இருக்கிறது.   மூன்றில் ஒரு மின்னல் நிலத்தை அடைவதாக கூறுகிறார்கள்.  

மின்னலில் வெப்பம் மின்சாரம் மட்டுமின்றி உயிர் தோன்ற முக்கியமான அம்சமான அமினோ ஆசிட்களும் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மில்லர் உரே (Miller- Urey experiment) பரிசோதனை மூலம் மின்னலால் 10 வகையான அமினோ ஆசிட்கள் உருவாவதை கண்டுபிடித்தார்கள்.  உலகில் உயிர்களை தோற்றுவித்ததே மின்னல் தான் என்ற கோட்பாடும் உண்டு. 

மின்னல் அரை நொடி தான் என்றாலும் அதன் வெப்பம் 50000 பாரன்ஹீட்டை தாண்டும். கிட்டத்தட்ட ஐந்து சூரியனுக்கு சமம்.   பத்து  முதல் முப்பது கோடி வோல்ட் வரை மின்சாரத்தை பாய்ச்சும். நம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரம் 220 முதல் 250 வோல்ட் அளவுக்குள்  தான் இருக்கும்.    போர் முனையில் படைகள் திரண்டிருக்கும் இடத்தில் ஒரு மின்னலை தரையிறக்க முடிந்தால் அதனால் வரும் அழிவை நினைத்து பாருங்கள். அழிவு மட்டுமின்றி ரேடார்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் என அனைத்தையும் செயல் இழக்க செய்து தலைமையுடனான தொடர்பையும் துண்டிக்க முடியும். 

இது போன்ற ஒரு பரிசோதனையை தான் அமேரிக்க இயற்பியலாளர் எலிஸ்ஸா ஈஸ்ட்வெட் (Elissa Eastvedt)  என்ற பெண்மணி செய்தார்.  ஜூலை 11, 2008 ல் மெக்சிகோவின் ஒரு மலைப்பகுதியில் இந்த ஆராய்ச்சியை நடத்தினார்.  அவர் பூமிக்கடியில் தாவளம் அமைத்து அதன் மேல் பாறைகளை கொண்டு மூடி இந்த பரிசோதனையில் ஈடுபட்டார். கரணம் தப்பினால் மரணம் என்னும் அளவுக்கு ஆபத்தான பரிசோதனையாக இது இருந்தது.  ஏனெனில் மின்னல் தாக்கும் இலக்கிற்கு வெகு அருகில் இவர் இருந்தார்.

alt text

 ஒரு ராக்கெட்டில் வயரை இணைத்து மேகங்களுக்குள்  அனுப்பினார்.   பலமுறை தோல்வி கண்டாலும் ஏழாவது முறை அவர் அனுப்பிய ராக்கெட்டில் மின்னல் பாய்ந்தது.  ராக்கெட்டை தாக்கிய மின்னலில் இருந்த மின்சாரம் பூமியில் இருக்கும் இலக்கை தாக்கியது.    
 

alt text


இது போல ராக்கெட்டில் அதிகளவு மின்சாரத்தை கடத்தும் மின் கம்பியை இணைத்து எதிரி படைகளை தாக்கினால் என்னாகும். சுமார் எட்டு கிலோ மீட்டர் அளவுக்கு சர்வ நாசத்தை ஏற்படுத்தும்.  மின்சார உபகரணங்கள், தொலை தொடர்பு என அனைத்தையும் அழித்து விடும்.   

நவீன போர்களத்தில் மின்னல் ஒரு பயங்கரமான ஆயுதம் என்பதில் ஐயமில்லை. மின்னலை பயன்படுத்தி  போர் முனையில் அதிகளவில் படைவீரர்களை கொல்ல முடியும். மின்னலை தோற்றுவிக்க  கற்றுவிட்டால் பின் அதை ஆயுதமாக மாற்றுவது அதிக கடினமில்லை.      

43 வருடங்களுக்கு முன்பே  ஊடகங்கள் வானிலையை கட்டுப்படுத்துவது அறிவியலின் ஒரு புதிய கிளையாக உருவாகி இருப்பதாக எழுதியது.  அமேரிக்காவின் டைம்ஸ் நியூஸ் தினப்பத்திரிகை  டிசம்பர் 31ம் 1974 அன்று "வானிலை போர்: எதிர்கால ஆயுதமா?" என்ற தலைப்பில் எழுதிய தன் கட்டுரையில் எதிர்காலத்தில் வானிலைப்போர் எப்படி இருக்குமென்று சுட்டிக்காட்டியது.     

சமீபத்தில் ஈரானின் இராணுவ தளபதி சொன்னது போலவே ரஷ்ய செனேட் உறுப்பினரான Ekaterina Lakhova  எங்கள் நாட்டு வானிலையை யாரோ மாற்ற முயற்சிப்பதால் தான் எங்களால் வானிலையை சரியாக கணிக்க முடியவில்லை என்று  சென்ற வருடம் ஜூலை 11, 2017ல்  தெரிவித்தார்.    

வானிலையை  மாற்ற, கட்டுப்படுத்த‌ இன்னும் என்னென்ன வழிமுறைகள்  உள்ளன‌.   அடுத்த வாரம் பார்ப்போம்.

Leave Comments

Comments (0)