வானிலை போர்: நிழலா நிஜமா? பகுதி : 8

/files/detail1.png

வானிலை போர்: நிழலா நிஜமா? பகுதி : 8

  • 14
  • 0

-ஷாஜூ சாக்கோ

பூமியில் அணை கட்டுவது போலவே விண்ணிலும் ஜெட்ஸ்ட்ரீம் (Jet Stream)  எனும் நீரோட்டத்தை அணை கட்டி திருப்பி விட முடியுமென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.   கேரளா வெள்ளம் போன்ற ஒரு வெள்ளத்தை வேறு நாடுகளில் இருந்து கொண்டே அயனைஸேஷன் எனும் ரேடியோ அலைகள் மூலம் உருவாக்க முடியும்.     இதற்கு  மீச்சிறு அதிர்வெண் அலைகளை (Extremely Low Frequency Waves,  ELF  Waves) பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.  

இஎல்எப் அலைகளை பற்றி சொல்லும் போது நிக்கோலா டெஸ்லாவை  (Nikola Tesla  1856 –  1943)  பற்றியும் சொல்லியாக வேண்டும். நிக்கொலா டெஸ்லாவை  ஆற்றல் திருத்த ஆயுத (Directed Energy Weapons)   தொழில்நுட்ப தந்தை என கூறலாம். 

alt text
 
 இன்று வீடுகளில் நாம் பயன்படுத்தும் அல்டர்னேட் கரென்ட் (Alternate Current AC) மின்சார முறையை கண்டுபிடித்தவர்களில் ஒருவர்.  மாமேதையான‌ இவர் வானிலையை மாற்றும் ஆராய்ச்சிக்கு வித்திட்டவரும் ஆவார்.    இவர் கண்டுபிடித்த நடுங்க வைக்கும் கோட்பாடு தான்  மிக குறைந்த அதிர்வெண் அலைகள் (Extreme Low Frequency Waves,  ELF Waves).   நாம் அன்றாடம் உபயோகப்படுத்து டிவி ரேடியோக்களில் உள்ள ஸ்பீக்கர்களில் இருந்து வரும் குறைந்த அதிர்வெண்களை ஒத்தது தான் இந்த இஎல்எஃப் அலைகள்.
இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களில் இருந்தும் வெளிப்படும். இதன் அதிர்வெண் மிக குறைந்த அளவில் இருப்பதால் இது எந்த பாதிப்பையும் நமக்கு தருவதில்லை.

 

alt text
ஆனால் இந்த இஎல்எஃப் அலைகளை பயன்படுத்தி வளிமண்டலத்தில் உள்ள அயனாஸ்பியரை வெப்பப்படுத்தி அதை வீங்க வைப்பதாக கூறப்படுகிறது.  
ரஷ்யாவில் ஜுலை 1976ல் டுகா ரேடார் ( Duga Radar  1976-1989) பொறுத்தப்பட்டதில் இருந்து அதன் இஎல்எஃப் ரேடியோ சிக்னல்களால் வட அமேரிக்கா முழுவதுமே தொலைதொடர்பு சாதனங்கள் செயலிழந்ததாகவும் செய்திகள் உண்டு .  இதன் சிக்னல்கள் (10 hz) விட்டு விட்டு வருவதால் அதை ரஷ்யாவின் மரங்கொத்தி (Russian 
Woodpecker) என்ற பட்டபெயரும் இதற்கு உண்டு.      ரஷ்யா அமேரிக்காவின் மேல் பரவ செய்த இஎல்எஃப் சிக்னல்களால் தொலைதொடர்பு சாதனங்கள் செயல்பாட்டிலும் இடையூறு ஏற்பட்டது

 alt text
இந்த ரேடார் விண்ணில் ரஷ்யாவை தாக்க வரும் ஏவுகணையை வெகுதொலைவிலேயே கண்டுபிடிக்க நிறுவப்பட்டதென்று ரஷ்யா சொன்னாலும் 1982ல் அமேரிக்காவில் பென்டகன்  ஆராய்ச்சியாளர் எல் பான்டே (L. ponte)  இந்த ரேடார் கருவி அயனாஸ்பியரில் (Ionosphere) செயற்கையான அயனைஸேஷன் அடுக்குகளை  ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.   இது நிகோலா டெஸ்லா நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய கோட்பாட்டை ஒத்திருந்தது. இவ்வாறாக அயனைஸ்பியரை வீங்க வைப்பதன் மூலம் ஜெட் ஸ்ட்ரீமின் பாதையை மாற்றிவிட முடியும்.
 

alt text
அயனாஸ்பியர் வீங்கினால் அதை நிரப்ப ஸ்ட்ராட்டோஸ்பியரும் (Stratosphere) வளைந்து அதனோடு கூடவே ஜெட் ஸ்ட்ரீமும் வளைவதால் அது தன் வழக்கமான பாதையில் இருந்து விலகி வேறு பாதையில் செல்லும்.

   அயனைஸேஷன் என்றால் கதிர்வீச்சின் மூலம் ஒரு அணு எதிர்மறை (Negative)  அல்லது நேர்மறை (positive) மின்னூட்டம் பெற்று  எலெக்ட்ரானை கூட்டுவது அல்லது இழப்பதை தான் அயனைஸேஷன் என்று கூறுகிறார்கள். 

alt text  
இது போன்ற காமா, எக்ஸ்ரே கதிர்களால் கதிரியியக்கம் நம் உடலில் பாய்ந்து அயனைஸேஷன் நம் உடலில் நிகழ்ந்தால் அது நம் டிஎன்ஏவை தாக்கி கேன்ஸரை உருவாக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
alt text

‍வளி மண்டல அடுக்கான அயனாஸ்பியரை அயனய்ஸேஷன் மூலம் வெப்பப்படுத்துவதால்  வானில் இருக்கும் ஜெட் ஸ்ட்ரீமின் பாதையை மாற்ற ரஷ்யா முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார் எல் பான்டே.  அயனாஸ்பியரை இஎல்எஃப்  கதிர்வீச்சின் மூலம் வெப்பப்படுத்துவது வானில் ஒரு அணையை கட்டுவது போன்றதாகும். 

alt text


இவ்வாறு மாற்றுவதால் ஒரு நாட்டில் பஞ்சத்தையோ அல்லது பெருமழையை பொழியவைத்து பெருவெள்ளத்தையோ உருவாக்க முடியும்.    

alt text
 
ரஷ்யாவின் அந்த ரேடார் கருவி செயல்பட தொடங்கிய பின் விசித்திரமான  மாற்றங்கள் நிகழ்ந்தது.  காலநிலை கணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.   காற்றின் திசையும் விசித்திரமாக மாறி இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.  ஈரப்பதமுள்ள காற்று கடலில் திசை மாற்றப்படுவதாக அச்சப்பட்டனர். 
 1987 முதல் 1992 வரை கலிபோர்னியாவில் அமேரிக்க சரித்திரத்திலேயே மோசமான பஞ்சம் நிலவியது.   1995 ல் தான் ஜெட் ஸ்ட்ரீம் மீண்டும் தன் வழக்கமான பாதைக்கு திரும்பியது.

இன்று மழையை உருவாக்க அயனைஸேஷன் மூலம் மேகங்களில் சிசிஎன்னை (Cloud Condensation Nuclei ) உருவாக்கி மழையை கொண்டு வர முடியும். மீட்டியோ சிஸ்டம்ஸ் (Meteo Systems) என்ற நிறுவனம் அபுதாபியில் மழையை கொண்டு வர டவர்கள் நிர்மாணித்து இந்த முறையில் மழையை பெய்ய வைத்து வருகிறது.   

alt text

இது போன்ற அயனாஸ்ப்யர் ஆராய்ச்சி திட்டமான ஹார்ப் (H.A.A.R.P) மிகப்பெரிய அளவில் வானிலை மாற்றத்தை உருவாக்க வல்லது.   இதைப்பற்றி வரும் வாரத்தில் பார்ப்போம்.
 

Leave Comments

Comments (0)