வானிலை போர்: நிழலா நிஜமா?  பகுதி : 7

/files/detail1.png

வானிலை போர்: நிழலா நிஜமா?  பகுதி : 7

  • 1
  • 0

-ஷாஜூ சாக்கோ

வானவியலில் மிக முக்கியமான நபர் ஹாரி வெக்ஸ்லர் (Harry Wexler  1911 – 1962).  இவர் வானியலில்  1939 ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  புயலுக்குள் வேண்டுமென்றே பறந்த முதல் வானவியல் விஞ்ஞானி இவர் தான்.  புயலை பற்றி அறிவியல்பூர்வமான தகவல்களை சேகரிக்க டக்ளஸ் ஏ20 ஹாவோக் (Douglas A-20 Havoc) என்ற சிறு போர் விமானத்தில் புயலுக்குள் பறந்தார்.  
                                              alt text
கணிப்பொறியின் பயனால் வானிலையை கணிப்பது பற்றியும் இவர் ஆலோசித்து வந்தார். ஹாரி அமேரிக்காவில் தலைமை வானிலை ஆராய்ச்சியாளராக இருந்தார்.    ஹாரியின் புயல் ஆராய்ச்சியில்  நாவலாசிரியர் ஆர்துர் க்ளார்க்க்கு (Arthur C. Clarke 1917 –  2008) மிகுந்த ஆர்வம் இருந்தது. இதனால் அவர் ஹாரியிடம் தொடர்பில் இருந்தார்.   ஒருமுறை ஆர்துர் க்ளார்க் நாற்பதுகளில் ஹாரிக்கு எழுதிய கடிதத்தில் வானிலையை அறிய செயற்கைகோள் ஒன்றை விண்ணில் அமைக்கும் என் யோசனையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதினார். அதுவே ஹாரியை வானிலையை கண்காணிக்கும் முதல் செயற்கை கோளான டிரோஸ் 1 ஐ 1960ல் விண்ணில் ஏவ‌ பாதை வகுத்து தந்தது.   ஆர்துர் க்ளார்க் ஒரு அறிவியல் தீர்க்கதரிசி, எதிர்காலத்தை பார்க்கும் வல்லமை பெற்றவர் என்று புகழப்பட்டார்.   ஆர்துர் க்ளார்கின் அறிவியல் புதினங்கள் பல விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது.    

                                                    alt text
 
ஹாரி வெக்ஸ்லர்  வானிலையை மாற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளிமண்டல அடுக்கான  அயானஸ்ப்யரில் (ionosphere) துளையிடுவதன் மூலம் உலகளாவிய வானிலை மாற்றங்கள் உருவாகும் என்று 1962 ல்  ஒரு சொற்பொழிவில் எச்சரித்தார்.   அதே வருடம் இவர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்தார். 


 இவர் இறப்புக்கு பின் அவர் அறையில் இருந்த பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் மூலம் வானிலையை மாற்றும் தொழில் நுட்பத்தை இவர் ஆராய்ந்து வந்தது தெரிய வந்தது. .4 மெகாடன் அளவுள்ள ப்ரோமைன் (Bromine)  குண்டை ஓசோனில் பூமத்திய ரேகை அருகே வெடிக்க செய்வதன் மூலம் ஓசோன் படலம் முழுவதையுமே அழித்து விட முடியும் என்று கண்டுபிடித்திருந்தார்.    ஓசோன் படலம் ஸ்டிராட்டோஸ்பியர் (Stratosphere) என்னும் வளி மண்டல அடுக்கில் உள்ளது.   சூரிய கதிர்களில் இருக்கும் ஆபத்தான புற ஊதாக்கதிர்களில்  (Ultra violet radiation) இருந்து பூமியில் இருக்கும் உயிர்களை காக்கும் கவசமாக ஓசோன் படலம் இருக்கிறது.    ஓசோன் சேதமடைந்தால் புவி வெப்பமடையும்.  புவி வெப்பமடைந்தால் அது பூமியின் கால நிலையை மாற்றும். புவி வெப்பமடைதல் போலவே புவி குளிர்வடைதலும் உண்டு.  இயற்க்கையிடம் தான் இந்த உபாயம் இருக்கிறது.  அதிக சீற்றத்துடன் வெடிக்கும்  எரிமலையால் பூமியை குளிரவைக்க முடியும்.

                                                         alt text

பூமியின் ஆழத்தில் இருக்கும் லாவா எரிமலையில் வெடிக்கும் போது அதனோடு வாயுக்களும், தூசி துகள்களும் வானில் பீச்சியடிக்கப்படுகிறது. எரிமலை நீராவி மற்றும் கார்பன்டைஆக்ஸைடையும் பெருமளவில் வெளியிடுகிறது.. ஆனாலும் எரிமலை வெளியிடும் சல்பர் டை ஆக்ஸைடு (Sulfur dioxide) தான் பெருமளவில் கால நிலை மாற்றத்திற்க்கு அடிகோலுகிறது. இது வானில் இருக்கும் நீருடன் கலந்து சிறு சிறு துகள்களாக வானில் ஒரு படலமாக படர்ந்து சூரிய ஒளியை பிரதிபலித்து பூமிக்கு வரவிடாமல் தடுக்கும். அவ்வாறு   பிரதிபலிப்பதால் குறைந்த சூரிய வெப்பமே பூமியை அடைய முடியும். இதனால் பூமியில் வழக்கத்தை விட வெப்பம் குறையும்.   இந்த படலம் சுமார் மூன்று ஆண்டுகள் வரையிலும் வானில் இருக்கும்.  காற்று அதை பல்வேறு பகுதிகளுக்கும் பரப்பி பூமி முழுவதையும்  குளிர்விக்கும். 

பூமியில் வீசும் காற்றானது  எரிமலையில் இருந்து வெளியேறும் புகையை பூமியின் பல்வேறு பகுதிகளுக்கும் பரப்பும் என்றும்  புவி வெப்பமடைந்தால் அது பூமியின் கால நிலையை மாற்றும் என்றும் சொல்லியிருந்தேன்.  அது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம். 
அதற்க்கு முன் காற்று எப்படி வீசுகிறது என்பதை பார்ப்போம்.  சூரியன் பூமியை சீரற்ற முறையில் வெப்பப்படுத்துவதால்  நமக்கு குளிர்ந்த காற்றும் வெப்பமான காற்றும் கிடைக்கிறது.  இதனால் பூமி பரப்பில் குறைந்த அழுத்தமும் உயர் காற்றழுத்தமும் உருவாகும்.  குறைந்த காற்றழுத்தத்தை நோக்கி உயர் காற்றழுத்தம் இருக்கும் இடத்தில் இருந்து காற்று போவதால் பூமியில் காற்று வீசுகிறது. 

இந்த காற்றோட்டம் பூமியில் இருக்கும் ஆறுகள் போலவே வானிலும்  ஜெட் ஸ்ட்ரீம் (Jet Streams) எனப்படும் காற்று ஓட்டத்தை உருவாக்குகிறது.  கயிறு போல நம் பூமியை சுற்றி ஓடும் இந்த காற்றின் ஓட்டத்தின் மூலம் ஒரு மகாநதியை போலவே பல்லாயிரம் கோடி லிட்டர் நீரும் இடம் பெயர்ந்து நம் பூமியை சுற்றுகிறது. 

                                                            alt text
 
240 கிமீ தூரமிருக்கும் சென்னைக்கு  வீராணம் ஏரியில் இருக்கும் நீரை கொண்டு வர படாதபாடுபடுகிறோம். ஆனால் இயற்க்கை  அதை விட ப‌ல மடங்கு நீரை முப்பதாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்க்கு கூட  அனாயாசமாக  நகர்த்தி கொண்டு போகிறது.      இந்த ஜெட் ஸ்ட்ரீம் நகர்த்தும் நீர்  தான் மழையாகவும், புயலாகவும், வெள்ளமாகவும் மாறி வானிலை மாற்றங்களை நம் பூமியில் உருவாக்குகிறது.  இந்த ஜெட் ஸ்ட்ரீம்  தான் நம் பூமியின் ரத்த நாளம் என்று கூட சொல்லலாம்.    
இந்த ஜெட் ஸ்ட்ரீம் கடல் மட்டத்தில் இருந்து  சுமார் 30000-50000 அடி உயரத்தில் இருக்கிறது. ( போலார் ஜெட் Polar Jet 30,000–39,000 அடி,  சப் ட்ராபிக்கல் ஜெட்  Sub Tropical Jet 33,000–52,000 அடி) மேலே படத்தில் காண்பித்திருப்பது போல வளி மண்டலம் பல அடுக்குகளை கொண்டது.  ட்ரோப்பாபாஸ் (Tropopause) எனும் வளிமண்டல எல்லையில் தான் இந்த ஜெட் ஸ்ட்ரீம் ஓடுகிறது.    
பூமியில் அணை கட்டுவது போலவே விண்ணில் இந்த ஜெட் ஸ்ட்ரீம்  எனும் நீரோட்டத்தை அணை கட்டி திருப்பி விட முடியும். இந்த ஜெட் ஸ்ட்ரீமின் பாதையை மாற்றிவிட்டால் ஒரு நாட்டையே பாலைவனம் ஆக்கி விடலாம், அல்லது வெள்ளத்தால் மூழ்கடித்துவிடலாம்.  அதை எப்படி செய்கிறார்கள். அடுத்த வாரம் எழுதுகிறேன்.


 

 

Leave Comments

Comments (0)