வானிலை போர்: நிழலா நிஜமா?  பகுதி : 6

/files/detail1.png

வானிலை போர்: நிழலா நிஜமா?  பகுதி : 6

  • 3
  • 0

-ஷாஜீ  சாக்கோ

இன்றைய நவீன உலகில் ஒரு நாட்டில் நிகழும் புயல் சூறாவளி நில நடுக்க‌ம் போன்ற இயற்கை அழிவுகளும், பஞ்சம், வெப்பம் போன்ற வானிலை மாற்றங்களும் எதிரி நாட்டால் உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் ஒவ்வொரு நாட்டிற்க்கும் இருக்கிறது. அதற்கு காரணம் இன்று வானிலையை மாற்றும் தொழில்நுட்பங்கள் வெகுவாக‌ முன்னேறி இருக்கின்றன.  
 
அமேரிக்கா நார்த் கரோலினாவில் பிரசுரமாகும் தி டைம்ஸ் நியூஸ் என்ற செய்தித்தாழ்  வானிலை போர் : எதிர்கால ஆயுதமா ? என்ற தலைப்பில்  எதிர்காலத்தில் எந்த அளவுக்கு  வானிலை போர் தொழில் நுட்பங்கள் வளர்ந்து இருக்கும்  என்பது பற்றி   தலையங்கம் ஒன்றை டிசம்பர்  1974 ல் எழுதியது.
 alt text
 
அதில் “எதிர்காலத்தில் வெள்ளம், பஞ்சம், சுனாமி, ஓசோனில் ஓட்டை போடுவது, சூறாவளி போன்றவைகளை எதிரி நாட்டிற்க்கு அனுப்பும் தொழில் நுட்பம்   வளர்ந்திருக்கும் என்றும்.  தற்போது அமேரிக்கா வருடத்துக்கு இரண்டு மில்லியன் டாலரை வானிலையை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிக்கு ஒதுக்கி இருப்பதாகவும் தகவல் தெரிவித்தது. இன்னும் இருபது ஆண்டுகளில் (1994ல்) இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு நாட்டால் தன் நாட்டில் செழிப்பான வானிலையை நிலை நிறுத்துவதோடு எதிரி நாட்டில் பாதகமான வானிலையை உருவாக்கவும் முடியும்.  அப்படியான சூழ்நிலையில் இது வானிலை போராக‌ பல வருடங்கள் தொடர்ந்து நடக்கும். ஆனால் அது ராணுவத்துக்கு மட்டுமே தெரிந்த போராக இருக்கும் என்று  எழுதியது.   அமேரிக்க மட்டுமின்றி ரஷ்யாவும் வானிலையை மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக அதில்  தெரிவித்தது.   
1950 களிலேயே சில அமேரிக்க விஞ்ஞானிகள்  சோவியத் யூனியன் வானிலையை மாற்றும் சக்தியை பெற்று விட வாய்ப்புள்ளதாக எச்சரித்தனர். 1953ம் ஆண்டு ஆகஸ்ட்டில் வானிலையை கட்டுப்படுத்துவது பற்றி விவாதிக்க அமேரிக்க ஜனாதிபதியின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.   அமேரிக்கா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் ஊடகங்கள் முன்னிலையிலேயே  வெளிப்படையாக அவர்களின் திட்டங்களையும் முறைகளையும் பற்றி விவாதித்தனர். துருவ பனியை உருக வைத்து பெரும் வெள்ளத்தை உருவாக்கி பேரழிவை உருவாக்குவது. அதிக அளவிலான தூசியை அடுக்கு மண்டலத்தில் (Stratosphere) செலுத்தி தேவைக்கேற்ப மழையை உண்டாக்குவது போன்ற போர்  யுத்திகளை செயல்படுத்த முடியுமென்று தெரிவித்தனர். 

alt text 
ஆர்கடி போரிஸ்விக் மார்கின் (Arkady Borisovich Markin) என்ற ரஷ்ய பொறியாளர் ஆர்ட்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் பிரிக்கும் பேரிங் ஜலசந்தியில் அணுசக்தியால் இயங்கும் ஆயிரக்கணக்கான‌ மோட்டார்கள் பொறுத்தப்பட்ட‌ பெரும் அணையை கட்டி நீரை மடை மாற்றுவதன் மூலம் வடதுருவத்திற்க்கு அருகே இருக்கும் அதிக குளிர் கொண்ட பெருநகரங்களான நியூயார்க் மற்றும் லண்டனில் வெப்ப நிலையை அதிகரிக்க முடியும் என்று தெரிவித்தார்.  ஆனால் அமேரிக்க விஞ்ஞானிகள் அப்படி ஒரு அணையை  கட்டினால் பெரும் வெள்ளம் வரக்கூடுமென்று தவிர்த்து விட்டனர்.  
1953ல் கேப்டன் ஹோவர்ட் டி ஓர்விலி (Howard Thomas Orville ) தான் அமேரிக்க ஜனாதிபதியின் வானிலை கட்டுப்பாட்டு ஆலோசனை கமிட்டியின் தலைவராக இருந்தார். இவர் அமேரிக்க‌ கடற்படை அதிகாரி மட்டுமின்றி ஒரு வானியல் நிபுணரும் கூட.  மே 25, 1958 தேதியிட்ட தி அமேரிக்கன் வீக்லி (The American Weekly) இவரிடம் இருந்து தகவலை பெற்று யார் உலகின் வெப்பமானியை கட்டுப்படுத்த போகிறார்கள் என்ற பந்தயம் தொடங்கி விட்டதாக எழுதியது. 
alt text

 அதில்  "மிகப்பெரிய அளவில் வானிலையை மாற்றக்கூடிய இந்த  தொழில்நுட்பத்தில் நமக்கு நட்பு நாடாக இல்லாத ஒரு நாடு வெற்றி கண்டு விட்டால் அது அணு ஆயுத போரை விட அதிக பேரழிவை நமக்கு தரலாம்" என்று எச்சரித்தார்.   அறுபது ஆண்டுகளுக்கு முன்பே வானிலையை கட்டுப்படுத்தும் இந்த பந்தயம் தொடங்கியிருக்கிறது.     அந்த பத்திரிகை செயற்க்கை கோள் ஒன்று சூரிய ஒளியை குவித்து பூமியின் பனிப்பாறைகளை உருகச்செய்வது போன்ற தோற்றத்தை தரும்  இந்த படத்தை வரைந்து வெளியிட்டது. 
அன்று கற்பனையில் வரைந்த இந்த ஓவியம் இன்றைய தொழில் நுட்ப யுக‌த்தில் சாத்தியமான ஒன்றே. லேசர் டெக்னாலஜியிலும் செயற்கை கோள் தொழில் நுட்பத்திலும் பெருமளவு முன்னேறி விட்டோம். இன்று ஓர்பிட்டால் (Orbital), ஸ்பேஸெக்ஸ் (SpaceX) போன்ற ராக்கெட் ஏவும் தனியார் நிறுவனங்கள் கூட உள்ளன.   வளர்ந்த நாடுகளால் அயனிகளை வெளிப்படுத்தும் டவர்களை பயன்படுத்தி பாலைவனத்தில் கூட மழையை தோற்றுவிக்க முடியும். இதைப்பற்றி வரும் வாரங்களில் விரிவாக எழுத இருக்கிறேன். 

2008ல் சைனாவில் நடந்த‌ ஒலிம்பிக்  போட்டிகளின்  தொடக்க விழா நடக்கும் பீஜிங் நகரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருந்தது. ஆனால்  வழிப்பறி நடத்துவது போல மழை மேகங்களை அதன் வழியிலேயே  தடுத்து மழையாக மாற்றி விட்டனர். 

alt text 
இதற்காக‌ 1100 ராக்கெட்டுகளை வானத்தில் செலுத்தியதாக பிபிசி தெரிவித்தது. விழா நடக்கும் பீஜிங் நகரை ஒட்டிய நகரான பாடிங்கில் அதே இரவு 100 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது ஆனால் பீஜிங்கில் ஒரு சொட்டு மழை கூட இல்லை.  இது போன்ற நிகழ்வுகள் ஆச்சரியத்தை தந்தாலும் ஒரு பக்கம் அதிர்ச்சியையும் தருகிறது.  ஆச்சரியங்கள் இன்னும் வரும்.. வரும் வாரம் மீண்டும்.

முந்தைய தொடரினை படிக்க 

Leave Comments

Comments (0)