உலக வெப்பமயமாதலின் மோசமான விளைவுகளை எச்சரிக்கிறது- ஐநா அறிக்கை

/files/detail1.png

உலக வெப்பமயமாதலின் மோசமான விளைவுகளை எச்சரிக்கிறது- ஐநா அறிக்கை

  • 0
  • 0

-V.கோபி 

வெப்பநிலை அதிகரிப்பதை தடுக்க முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான நடவடிக்கை தேவையாக உள்ளது என ஐநா அறிக்கை
தற்போதைய வேகத்தில் உலக வெப்பமயமாதல் தொடர்ந்தால், 2030 லிருந்து 2052-ம் ஆண்டிற்குள் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என ஐநா-வின் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கான குழு (IPCC) அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக வெப்பமயமாதலின் குறைந்த இலக்கை அடைய, முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது பயனங்கள், ஆற்றல்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்துவதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இல்லையேல், வெப்ப அலைகள், புயலால் ஏற்படும் வெள்ளம் மற்றும் சில பகுதிகளில் வறட்சியும் சில உயிரினங்கள் அழிவையும் சந்திக்கும் ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளதாக ஐநா அறிக்கை கூறுகிறது.

2015-ம் ஆண்டு நடந்த பாரீஸ் ஒப்பந்தத்தின் போது ஒத்துக்கொண்ட 2 டிகிரி செல்சியஸிற்கு பதிலாக பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிக்க விடாமல் பார்த்துக்கொண்டால், மக்களுக்கும் சூழலியலுக்கும் சிறப்பான நன்மைகள் கிடைக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனிதர்களின் நடவடிக்கைகளால் பூமியின் வெப்பநிலை ஏற்கனவே ஒரு டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதற்கே நாம் பல விளைவுகளை சந்தித்து வருகிறோம். குறிப்பாக, 1880-ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை எட்டு இன்ச் கடல் மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த 1500 ஆண்டுகளில், ஆர்டிக் கடலின் பனிக்கட்டிகள் வேகமாக குறைந்து வருவதை பார்த்து வருகிறோம். மேலும் கால நிலை மாற்றத்தால் பல அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆகவே மற்றொரு 50 சதவிகித அளவிற்கு நாம் பூமியை சூடு படுத்துவதால் மிகப்பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும், குறிப்பாக சிறிய தீவுகள், ஏழை நாடுகள். இப்படியே நீடித்தால் 2030-ம் ஆண்டிற்குள் நமது பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் சென்றுவிடுவதோடு 2100-ம் ஆண்டில் 3 டிகிரி செல்சியஸை எட்டிவிடும். ஆகவே பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கட்டுக்குள் வைத்திருக்க, 2050-ம் ஆண்டிற்குள் தற்போதுள்ள 25 சதவிகித அளவை விட 70 முதல் 80 சதவிகித அளவிற்கு புதுப்பிக்கதக்க ஆற்றல் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. 

 

“நமது வாழ்க்கையின் உறுதுணையாக இருக்கும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்படும் அழிவை தவிர்க்க நம்மிடம் மெல்லிய வாய்ப்பே உள்ளது என இந்த அறிக்கை நமக்கு உணர்த்துவதாக” IPCC உறுப்பினர் அம்ஜத் அப்துலா கூறுகிறார்.

“உலகம் முழுவதிலும் உள்ள மக்கள், குறிப்பாக, இந்தியாவில் வெப்பமயமாதலின் தாக்கத்தை அனுபவித்தே வருகிறோம். ஒரு கரைக்கு கேதர்நாத், ஸ்ரீநகர் மற்றும் மறுகரையில் சென்னை, கேரளா ஆகிய நகரங்களில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்துள்ளோம். அதேசமயத்தில் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான பஞ்சமும் நிலவுகிறது. ஆனால் நாம் வாழ்ந்து வரும் சூழலியலான நிலத்தைப் பற்றியோ அல்லது கடலைப் பற்றியோ, அதன் பாதிப்புகளை பற்றியோ நாம் புரிந்து கொள்வதேயில்லை” என்கிறார் இந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான இந்தியாவைச் சேர்ந்த அரோமர் ரேவி.


 

Leave Comments

Comments (0)