சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை: வெதர்மேன்

/files/detail1.png

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை: வெதர்மேன்

  • 0
  • 0

-வித்யா 

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 15) மற்றும் நாளை (ஆகஸ்ட் 16) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்துவருகிறது. குறிப்பாக கேரளாவில் 5 நாட்களுக்கும் மேலாகக் கனமழை பெய்துவருவதால், பெரும்பாலான அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால்  அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துவந்தது.  இது வெப்பசலனத்தால் ஏற்படும் மழை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில்," இன்று மற்றும் நாளைச் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலையில் குளிர்ந்த வானிலை நிலவும். கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரியில் கனமழை பெய்துள்ளது" என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் கேரளாவில் வயநாடு, கோழிகோடு, கன்னூர் கசர்கோட், மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை வரை கன மழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே பெய்த கனமழையால், கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால், விமான சேவை முடங்கியுள்ளது. வரும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை விமானசேவைகள் கொச்சி விமான நிலையத்தில் இருக்காது என்று விமான நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave Comments

Comments (0)