கேரளா வெள்ளம்: 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு

/files/detail1.png

கேரளா வெள்ளம்: 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு

  • 0
  • 0

-கருப்பு 

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது. அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம்  உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் சிக்கியும் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தத்தளித்து வருகின்றனர். 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார்.

Leave Comments

Comments (0)