கேரளாவில் கனமழை: 17 பேர் உயிரிழப்பு

/files/detail1.png

கேரளாவில் கனமழை: 17 பேர் உயிரிழப்பு

  • 0
  • 0

-கருப்பு 

கேரள மாநிலத்தில் பெய்துவருகிற கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்து விட்டன. இந்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்து உள்ளன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 10 பேரும், தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், தேவிகுளத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் 3 பேரைக் காணவில்லை.

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் தேவிகுளம், உடம்பன் சோலை தாலுக்காவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையளித்து உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். இதற்கிடையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடமலையார் அணையில் இருந்து 600 கனஅடி நீர் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பெரியாற்றில் வெள்ளம் ஓடுகிறது. மேலும், இடுக்கி அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 2,403 அடியில் 2,398 அடியை எட்டியுள்ளது.


 

Leave Comments

Comments (0)