பலத்த மழை: ஒரே நாளில் 27 பேர் பலி

/files/detail1.png

பலத்த மழை: ஒரே நாளில் 27 பேர் பலி

  • 0
  • 0

வித்யா

உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் நேற்று (ஜூலை 27) ஒரு நாளில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த 25ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்று முன்தினமும் இந்த மழை நீடித்ததால் மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது.

இதனால் வீடுகள் இடிந்தும், மின்னல் தாக்கியும், வெள்ளத்தில் சிக்கியும் மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாட்களில் 27 பேர் இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக்ராவில் நான்கு பேரும், மணிப்பூரில் 4 பேரும், முசாஃபர் நகர், காஸ்கனியில் 3 பேரும், மேரட், பேர்லி ஆகிய இடங்களில் 2 பேரும், கான்பூர் மதுரா, காஸியாபாத், ஹாபூர், ஜான்சி, ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான உணவு, உடை போன்றவை வழங்க ஏற்பாடு நடந்துவருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உத்திரபிரதேச மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், ஒடிசா போன்ற பல மாநிலங்களிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)