கரையைக் கடந்தது கஜா- 15 பேர் உயிரிழப்பு

/files/detail1.png

கரையைக் கடந்தது கஜா- 15 பேர் உயிரிழப்பு

  • 0
  • 0

-கருப்பு 

தமிழகத்தை அச்சுறுத்திவந்த கஜா புயல் அதிராம்பட்டினம் அருகே இன்று (நவம்பர் 16) கரையைக் கடந்தது.

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் பல மாவட்டங்களை அச்சுறுத்திவந்தது. இந்த கஜா புயலில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில  மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து சேதமாகியுள்ளன. நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பல வீடுகளின் மேற்கூரையே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் அதிராம்பட்டினத்தில் கஜா முழுவதுமாக கரையை கடந்தது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கஜா அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழை பெய்யும், திண்டுக்கல்லில் 60- 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave Comments

Comments (0)