கனமழைக்கு வாய்ப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை

/files/detail1.png

கனமழைக்கு வாய்ப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை

  • 0
  • 0

- சண்முக வசந்தன் 

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் தென் தமிழகத்தில் கனமழையும், தமிழக முழுவதும் மிதமான மழையும் பொழியுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடலோர பகுதியிகளில் மழை பொழியுமென்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை இருக்கும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருப்பதோடு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் நீலகிரி, திருவண்ணாமலை, திருவாரூர், சிவகங்கை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்திருக்கிறது.

Leave Comments

Comments (0)