கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய முற்பட்ட தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழப்பு

/files/detail1.png

கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய முற்பட்ட தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழப்பு

  • 0
  • 0

சேலத்தையடுத்த  ஆத்தூரில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்ய முயன்ற கூலித் தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்து உள்ளது பள்ளக்காட்டை. இந்த ஊரில் செயல்பட்டுவரும் சேகோ ஆலையில் உள்ள கழிவு நீர்த் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடைப்பை செரிசெய்வதற்காக ஆலையில் பணிபுரியும் வேலாயுதம் என்பவர், கழிவு நீர்த் தொட்டியின் மூடியை அகற்றியுள்ளார். அப்போது விசவாயு தாக்கியதில் வேலாயுதம் மயக்கமடைந்து கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்துள்ளார். இதனைப் பார்த்த மற்ற தொழிலாளிகள், சேகோ ஆலையின் உரிமையாளர் என அடுத்தடுத்து ஐந்து பேர் வேலாயுதத்தைக் காப்பாற்றக் கழிவு நீர்த் தொட்டிக்குள் குதித்தனர்.

இதில் மணி என்கிற தொழிலாளி உயிரிழந்துள்ளார். மீதமுள்ள 5 பேரும் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உயிரிழந்த மணியின் உடலைப் பிரதேச பரிசோதனைக்காக அனுப்பிவைத்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.

Leave Comments

Comments (0)