சுகுமாரின் உருவாக்கத்தில் எஸ்.இராமகிருஷ்ணனின் ''அரவான்'' - பார்வையாளரின் பாராட்டு

/files/detail1.png

சுகுமாரின் உருவாக்கத்தில் எஸ்.இராமகிருஷ்ணனின் ''அரவான்'' - பார்வையாளரின் பாராட்டு

  • 0
  • 0


30.12.2018 அன்று நண்பர் சுகுமாரின், பாண்டிச்சேரி தியேட்டர் ஆர்ட்ஸ் அகாடமி தொடக்க விழாவில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் இயற்றிய அரவான் என்னும் நாடக அரங்கேற்றம் நடைபெற்றது

இப்போது தான் முதல்முறை சுகுமாரின், நடிப்பாற்றலைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. 'அரவான்' மகாபாரதத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். களபலிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனின் முந்தைய நாளின் மனநிலையைப் படம் படித்துக் காட்டுவதாக இந்நாடகம் அமைந்திருந்தது.

alt text

நாடகத்தின் ஊடே எழுத்தாளர் எஸ்.இரா, பல்வேறு சமூக, அரசியல் சிக்கல்களை ஆங்காங்கே பொதித்து வைத்துள்ளார். நாடகப் படிமத்தை மட்டும் கொள்ளாமல் சில மாறுதல்களோடு இதை மிகச் திறம்பட சுகுமார் பல்வேறு உடலசைவுகளின் மூலம் நமக்கு வெளிப்படுத்தினார். தனி நபராக அத்தனை வசனங்களையும் பேசி நமக்குள் அரவானை ஓர் உருவமாக இடம்பெறச் செய்தார். 

alt text

இடையிடையே தோள் பாவை மூலம் அருண் கார்த்திக் அவர்கள் இருவரின் உரையாடலை அமைத்தது வேறுபாடான, சிறப்பான ஒன்று.  ஒளி,ஒலி அமைப்பு, இடையிடையே பாடல்கள் என கலைகளின் கூடாரமாய் இந்நாடகம் அமைந்தது.

-தமிழ் மொழி

Leave Comments

Comments (0)