டாஸ்மாக்கை மூடாமல் எதற்கு ஓட்டு கேட்கிறீர்கள் ?- வழக்கறிஞர் நந்தினி 

/files/detail1.png

டாஸ்மாக்கை மூடாமல் எதற்கு ஓட்டு கேட்கிறீர்கள் ?- வழக்கறிஞர் நந்தினி 

  • 0
  • 0

 

"டாஸ்மாக்கை மூடாமல் எதற்கு ஓட்டு கேட்கிறீர்கள் ?" என அரசியல்வாதிகளிடம் பெண்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதனை வலியுறுத்தி நாளை (6.12.19) முதல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக வழக்கறிஞர் நந்தினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “போதைக்கு எதிராகவும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகவும், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர். நேற்று (டிசம்பர் 04) சென்னையை அடைந்த அவர்கள், கோட்டையில் மனு அளிக்கச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையைச் செலுத்தி, அவர்களைக் கைது செய்தனர். இதில் 4 பெண்கள் கடுமையாகக் காயமடைந்திருக்கின்றனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

டாஸ்மாக்கிற்கு எதிராகப் பெண்களின் போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. பல போராட்டங்களைத் தமிழக அரசு தாக்குதல்களின் மூலமாகத்தான் கையாள்கிறது.  இவர்களுக்கு டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற எண்ணம் துளிகூட கிடையாது. யார் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடினாலும் அவர்கள் மீது அடக்குமுறையைச் செலுத்தி அவர்களைக் கைது செய்யும் எண்ணம் மட்டுமே இருக்கிறது. டாஸ்மாக்கை மூடாமல் ஓட்டுக் கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் பெண்கள் கேள்விகேட்க வேண்டும். மேலும் "டாஸ்மாக்கை மூடாமல் எதற்கு ஓட்டு கேட்கிறீர்கள் ?" என அரசியல்வாதிகளிடம் பெண்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதனை வலியுறுத்தி நாளை (6.12.19) முதல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக” அவர் தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)