வானிலை போர்: நிழலா நிஜமா? பகுதி : 4

/files/detail1.png

வானிலை போர்: நிழலா நிஜமா? பகுதி : 4

  • 4
  • 0

 

-ஷாஜீ  சாக்கோ

செப்டம்பர் 16, 1961ல் எஸ்தர் சூறாவளியின் மேல் க்ளவுட் சீடிங் செய்து ஓரளவுக்கு வெற்றி பெற்ற அமேரிக்கா 1962ல் ப்ராஜெக்ட் ஸ்டார்ம்ப்யூரி (Project Stormfury) என்ற ஆராய்ச்சி திட்டத்தை அறிவித்தது. இது மிகப்பெரிய சூறாவளிகளை பரிசோதனை செய்ய ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சி திட்டமாகும். சூறாவளிகளின் இயக்கவியல், அமைப்பு, இயல்பை பற்றி தெரிந்து கொள்ளவும் அதன் சக்தியை குறைப்பது பற்றி ஆராய்வதை நோக்கமாக கொண்டும் தான் இது இயங்கியது.  கடலில் உருவாகி நிலத்தை அடைய வாய்ப்பே இல்லாத (<10%) சூறாவளிகளை மட்டுமே ஆய்வுக்கு பயன்படுத்துவதாக அறிவித்தது.  பரிசோதனை திட்டம் தொடங்கி பல மாதங்களாக க்ளவுட் சீடிங் செய்ய பொருத்தமான சூறாவளிகள் கிடைக்கவில்லை.   
சூறாவளியின் கண்ணில் சில்வர் அயோடைடை தூவுவதன் மூலம் அதன் சுவர் சிதைந்து புதிய கண் உருவாகும். சூறாவளியின் கண் 30 முதல் 65 கிமீ வரை விட்டத்தை (Diameter) கொண்டிருக்கும்.  புதிய  கண்ணின் ஆரம் (radius) முன்பிருந்த சூறாவளியின் கண்ணை விட அதிகமாக இருக்கும். அதனால் அழுத்தம் குறைந்து சூறாவளியை சுற்றி சுற்றும் காற்றின் வேகமும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூறாவளியின் கண்ணின் ஆரம் குறைவாக இருந்தால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.  

alt text 
Figure 4 Project Stormfury Crew
1963ல் சிறு விமானத்தில் சில்வர் அயோடய்டை ப்யூலா சூறாவளியின் கண்ணில் தூவினார்கள். முதல் முறை சில தவறுகள் ஏற்பட்டது. புயலின் கண்ணில் தூவாமல் வேறு இடங்களில் தூவினார்கள். ஆனால் அடுத்த நாள் சரியாக ப்யூலாவின் கண்ணில் தூவ,  ப்யூலா சூறாவளி கண்ணின் சுவர் சிதைந்து விழுந்தது.  ஆனாலும் அதிக ஆரம் கொண்ட புதிய சூறாவளியின் கண் உருவானது. 

alt text 
இந்த பரிசோதனையால் சூறாவளியின் காற்றின் வேகம் 20 சதவீதம் குறைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. 
alt text

சூறாவளியின் மேல் சில்வர் அயோடைட் மட்டுமின்றி (Soot Particle) சூட் பார்ட்டிக்கிளையும் தூவி அதன் போக்கை மாற்ற முடியும்.  சூட் பார்ட்டிக்கிள் என்பது அசுத்தமான புகை போன்ற கரித்துகள்களை கொண்டது. இதை சூறாவளியின் கண்ணில் தூவினால் இதன் கரிய நிறந்தால் வெப்பத்தை உறிஞ்சி அருகே இருக்கும் சூறாவளியின் மேல் மட்டத்தில் இருக்கும் குளிர்ந்த‌ காற்றை வெப்பமடைய செய்யும். இதனால் சூறாவளியின் பாதை மாறும். சூட் பார்ட்டிக்கிளை தூவும் இடம் நேரம் பொறுத்து சூறாவளியின் பாதையை மாற்றியமைக்க முடியும். 
அமேரிக்கா செப்டம்பர் 1965ல் பெட்ஸி சூறாவளியின் மேல் க்ளவுட் சீடிங் செய்ய போவதாக பத்திரிகைகளுக்கு அறிவித்தது.  பெட்சி சூறாவளி நான்காம் வகையில் பட்ட‌ சூறாவளியாகும். புயல் மற்றும் சூறாவளிகளை ஐந்து வகையாக பிரித்து வகைப்படுத்தி வைத்துள்ளார்கள். 65 கிமீ வரை வேகம் கொண்டது முதல் வகை,  65 கிமீ.  - 79 கிமீ. இரண்டாம் வகை, 79 கிமீ. – 93 கிமீ. மூன்றாம் வகை 93 கிமீ. 113 கிமீ. நான்காம் வகை 113 கிமீ மேல் ஐந்தாம் வகை.  

பெட்ஸி சூறாவளி நிலத்தை அடைய வாய்ப்பில்லை என்றும் வானிலை  கணிப்புகள் கூறின.   ஆனால் பெட்ஸி சூறாவளி நிலத்தை நோக்கி திரும்பி ப்ளோரிடா மற்றும் லூசியானாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி 87 மனித உயிர்களை காவு வாங்கியது.  ஆனால் அமேரிக்கா க்ளவுட் சீடிங் எதையும் செய்யவே இல்லை என்று மறுத்து விட்டது. அந்த சூறாவளி எப்படி திரும்பியது என்று  இன்றும் ஒரு புதிராகவே இருக்கிறது. 
 
வியட்னாம் போரின் போது அமேரிக்கா  நிலச்சரிவு, ஆற்று பாலங்களை வெள்ளம் ஏற்படுத்தி உடைப்பது போன்ற இலட்சியத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் க்ளவுட் சீடிங் முறையில் மழையை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு ஆப்பரேஷன் பாப்பாய் என்று பெயரிடப்பட்டது.  
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சோதனைகளை செய்து பார்த்திருக்கும் போது இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் வானிலையை மாற்ற க்ளவுட் சீடிங் முறையை தவிர வேறு என்னென்ன அறிவியல் உத்திகள் உள்ளன. மின்னல் எப்படி உருவாகிறது. மின்னலை பயன்படுத்தி அழிவை ஏற்படுத்த முடியுமா.  மின்னலை ஆயுதமாக மாற்றி எதிரிகளை அழிக்க முடியுமா. இனி வரும் வாரம் பார்ப்போம்.


 

Leave Comments

Comments (0)