வானிலை போர் ‍ Part 2

/files/detail1.png

வானிலை போர் ‍ Part 2

  • 4
  • 0

-ஷாஜூ சாக்கோ

 

ஈரானில் மழை பொழிவதை தடுக்க மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடுவதாக ராணுவ தளபதி Gholam Reza Jalali குற்றம்சாட்டியுள்ளார்.   ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகளின் மலை உச்சியில் பனி உறைந்து காணப்படுகிறது ஆனால் ஈரானின் 7200 அடி உயரமுள்ள மலைகளில் கூட பனியில்லை என்ற குற்றச்சாட்டையும் அது வைத்துள்ளது. 

ஈரானின் கடுமையான‌ குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.. உலகத்துக்கே பெட்ரோல் கொடுத்த ஈரானில் பெட்ரோல் இருக்கிறது ஆனால் குடிக்க தண்ணீர் இல்லை..   

மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடுவதாக சொன்ன ராணுவ தளபதியை  ஈரானின் செல்லூர் ராஜூ  என்று வரை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து கேலி பேசுகிறார்கள். ஒரு ராணுவ தளபதியே இதை சொல்கிறார் என்றால் சிந்திக்க வேண்டும்.  

இது ஒரு சாமானியனுக்கு புரியாது ஏனென்றால்  இது அறிவியல் புத்தகங்களில் கூட இல்லையே.  இன்று இது முழுக்க முழுக்க ஒரு நாட்டின் ராணுவத்தால்  இரகசியமாக நடத்தப்படும் ஆராய்ச்சியாக‌ தானே   மாறி இருக்கிறது.   இதை இவ்வளவு இரகசியமாக நடத்த ஒரு காரணமும் இருக்கிறது. இயற்க்கையை மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. இது போன்ற ஆராய்ச்சிகளை முன்பே அறிவித்து அதில் தோல்வியும் கண்டிருக்கிறது. அப்படி ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் அது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி விடும்.  அந்த ஆராய்ச்சியை நடத்த அனுமதி கொடுத்த அரசாங்கத்திற்க்கு எதிராக மக்களும் ஊடக‌மும் வேறு நாடுகளும் கூட  திரும்ப வாய்ப்புண்டு. அதனால் தான் இது இரகசியமாக இராணுவத்தால் நடத்தப்படுகிறது. வானிலையை மாற்றியமைக்கும் சக்தி பெற்ற இது போன்ற ஆராய்ச்சிகளை பற்றி பேசுவதற்க்கு முன் மழை எப்படி உருவாகிறது என்று பார்ப்போம்.
 
கடலில் இருக்கும் நீர் ஆவியாகி  மேகமாக மாறி அது குளிர்ந்ததும் மழையாக மாறி விடும் என்பது தான் நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது.  ஆனால் மேகங்கள் மழையாக மாற குளிர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பது  உண்மை தான் என்றாலும் அது மட்டும் போதாது.  

உதாரணமாக  நாம் தண்ணீர் கொதிக்க வைத்து  அத மூடி வைக்கும் போது  மூடியில் நீராவி பட்டு குளிர்ந்து மூடியில் நீர் துளிகள் உருவாகும்.  

ஆனால் வளி மண்டலத்தில அப்படி ஒரு தளம் ஏதும் இல்லையே.   வானில் மேகங்கள் மழைத்துளியாக மாற ஏதாவது ஒரு துகள் கருவாக தேவைப்படுகிறது.   இதை தான் (CCN Cloud Condensation Nuclei )சிசிஎன் க்ள்வுட் கன்டன்சேஷன் நூக்ளிய் என்று  சொல்கிறார்கள்.  இந்த துகள் பலவகையில் இருக்கலாம். தூசி, காட்டுத்தீயினால் உருவாகும் புகை, எரிமலையில் இருந்து வரும் சல்பேட் புகை என்று ஏதோ ஒரு நுண்ணிய‌ துகள் மழை துளியின் கருவாக இருக்க வேண்டும்.    இதை தான் க்ளவுட் சீட்ஸ் (Cloud Seeds) என்று சொல்கிறார்கள்.  இந்த துகளை மேகங்கள் பற்றி பிடித்து அதை சுற்றிலும் நீர் துளிகள் உருவாகும். அந்த நீர் துளிகள் பெரிதாகி பின் பொத்தென்று விழுந்து விடும். இது விழும் போது காற்றால் மீண்டும் சிறு துளிகளாக மாறி பூமியில் மழையாய் பொழியும்.

                                                                                                         alt text
 

இது போன்ற குளிர்ந்த நிலையில் இருக்கும் மேகங்களுக்கு க்ளவுட் சீட்ஸை உருவாக்கி தர முடிந்தால் அந்த மேகங்கள் மழையாக மாறிவிடும்.  இந்த முறையை தான் க்ளவுட் சீடிங் என்று சொல்கிறார்கள்
மேகங்களை மழையாக மாற்ற  லூயிஸ் கத்மன் என்பவர் 1891 லேயே திரவ கார்பன்டை ஆக்ஸைடை மேகங்கள் மேல் தெளிப்பதன் மூலம் அதை மழையாக மாற்ற முடியும் என்று சொல்லியிருக்கிறார்.  பின் பலரும் இதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்.   

காற்று மாசை மழையை உருவாக்கி குறைக்கவும்,  மழை பெய்ய வைக்கவும்  இந்த முறையை இன்று எல்லா நாடுகளும் செயல்படுத்துகிறது. சென்ற ஆண்டு (2017) கர்னாடகா அரசும் இந்த முறையில் மழையை பெய்ய வைத்தது.

முதன் முதலாக மிகப்பெரிய அளவில் 1947ல் அமேரிக்க ராணுவம் ஜெனரல் எலெக்ட்ரிக் என்ற கம்பேனியுடன் கூட்டு சேர்ந்து வானிலையை மாற்றும்   ப்ராஜெக்ட் சிர்ரஸ் (Project Cirrus) என்று பெயரிடப்பட்ட திட்டத்தை  அறிவித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. 

                                                                                                      alt text

 
ப்ராஜெக்ட் சிர்ரஸின் ஆராய்ச்சியாளர்கள் அப்போது அங்கு உருவாகி இருந்த ஒரு சூறாவளியின் மேல் ஒரு  பரிசோதனையை செய்ய‌ முடிவெடுத்தார்கள். அந்த சூறாவளி நிலத்தை அடையாது என்று கணிக்கப்பட்டதால் அதில் பரிசோதனையை நடத்துவதால் எந்த பாதிப்பும் வராது என்று ஆராச்சியாளர்கள் கருதினார்கள்.

சிறு விமானத்தில் 82 கிலோகிராம் உலர் பனியை (dry ice)  ப்ளோரிடாவிற்க்கு அருகே உருவாகியிருந்த சூறாவளியின் மேல் தூவியது. 

                                                                                                       alt text

இவ்வாறு தூவுவதன் மூலம் சூறாவளியின் சக்தியை குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள்.  ஆனால் அந்த சூறாவளி அதன் பாதையை மாற்றி நிலத்தை அடைந்து ஜோர்ஜியாவை  தாக்கியது. இது அங்கு  சுமார்  இருநூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை  சேதப்படுத்தியதோடு பல உயிர்களையும் பலி வாங்கியது.    

ப்ராஜெக்ட் சிர்ரஸ் வானிலையை மனிதனால் மாற்ற முடியும் என்பதற்க்கான முதல் சரித்திர நிகழ்வாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. வானிலையை ஒரு ஆயுதமாகவும்  பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்களில் பலரும் நம்பினார்கள்.  ஆனால் அவர்கள் நினைத்தபடியே வானிலையை மாற்ற பல சோதனைகளும் தேவைப்பட்டன. வெற்றி சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது.  

அமேரிக்கா க்ளவுட் சீடிங்கை அந்த சூறாவளியின் மேல் செய்யவில்லை என்று முதலில் மறுத்தது. கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல மில்லியன் டாலர்கள் இழப்பீடு கேட்டு அரசாங்கத்திற்க்கு எதிராக வழக்கு போடப்பட்டது.  அமேரிக்கா பல வருடங்கள் கழித்து சூறாவளியின் மேல் க்ளவுட் சீடிங் செய்ததை ஒப்புக்கொண்டது.   அமேரிக்கா அதன் பின் இந்த ஆராய்ச்சியை நிறுத்தியதா அல்லது மீண்டும் இது போன்ற முயற்சிகள் தொடர்ந்ததா... அடுத்த வாரம் பார்ப்போம்..
 

Leave Comments

Comments (0)