சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம்- மஞ்சள் நாடகம்

/files/detail1.png

சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம்- மஞ்சள் நாடகம்

  • 2
  • 0

அக்டோபர் 19ஆம் தேதி சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பிலான மஞ்சள் நாடகம் சென்னையில் நடைபெறுகிறது.

இந்தியா முழுக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மனித கழிவை மனிதனே அள்ளக் கூடாது என்று சட்டம் இருக்கும்போதுகூட இங்கு அது சகஜமாக நடந்துகொண்டிருக்கிறது. அத்தகைய இழிவைத் தடுக்கும் நோக்கில், சாதி ஒழிப்புக்கான ஓர் ஆயுதமாக 'மஞ்சள்` நாடகம் இருந்துவருகிறது. சாதி ஒழிப்பில் நமது சமரசங்களையும் சறுக்கல்களையும் விளிம்பிலும் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் குரலாக பல்வேறு பகுதிகளில் பல்வேறு குழுக்களாகச் செயல்பட்டுவருகின்றனர். 

அவ்வகையில் ஜெய் பீம் மன்றம், அரும்பு மாத இதழ் மற்றும் கட்டியக்காரி முயற்சியில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு எழும்பூரில் உள்ள தொன்போஸ்கோ ஆடிட்டோரியத்தில் மஞ்சள் அரங்கேற்றம் நிகழ்கிறது.
 

Leave Comments

Comments (0)