எந்த அச்சுறுத்தலுக்கும் நாங்கள் அடங்கப் போவது கிடையாது- வளர்மதி

/files/detail1.png

எந்த அச்சுறுத்தலுக்கும் நாங்கள் அடங்கப் போவது கிடையாது- வளர்மதி

  • 1
  • 0குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யாதவரை எங்களின் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

”குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. இஸ்லாமிய மக்களையும், ஈழத் தமிழர்களையும் புறகணித்துவிட்டு ஆர் எஸ் எஸ் அஜாண்டா சர்வாதிகார தன்மையில் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு சட்டத் திருத்தம்தான் இது. இதைக் கண்டிப்பாக அனுமதிக்கமாட்டோம்.

இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது மிகக் கொடுமையான முறையில் காவல்துறையும் ராணுவமும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த அளவுக்கான மோசமான சர்வாதிகார நாட்டிலா நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்படி மோசமான சர்வாதிகாரம் நடந்துகொண்டிருப்பதை மாணவர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. அதனால்தான் எங்களின் காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்ந்தோம்.

பல்கலைக்கழகத்திற்கும் ஜனநாயக வழியில் எங்களில் போராட்டத்தை வழி நடத்திச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால் காவல்துறை எங்களில் இரண்டு மாணவர்களை அடித்து காவல்துறைக்கு அழைத்து சென்று வைத்திருக்கின்றனர். இப்போது வரைக்கும் அவர்களை எந்த காவல்நிலையத்தில் வைத்திருக்கிறார்கள் என்றுகூடத் தெரியவில்லை. சொல்லப்போனால் அவர்களைக் கடத்தி சென்றிருக்கின்றனர்.

கைது செய்த இருவரையும் விடுதலை செய்கிறோம் ஆனால் நீங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்கிறார்கள்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யாதவரை எங்களின் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. கிட்டதட்ட 200, 300 காவல்துறையினர் எங்களைச் சூழ்ந்துகொண்டுதான் நின்றுகொண்டிருக்கிறார்கள். கையில் லத்தியோடு சுற்றி நின்றுகொண்டு அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எந்த அச்சுறுத்தலுக்கும் நாங்கள் அடங்கப் போவது கிடையாது. ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் இவர்களின் கோரத்தாண்டவத்தைப் பார்த்து அதற்கெல்லாம் துணிந்துதான் இங்கு உட்கார்ந்திருக்கிறோம். கைது செய்த இரண்டு மானவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். விடுதலை செய்யாமல் ரிமாண்ட் செய்தாலும், வேறு வழியே கிடையாது. போராட்டத்தை தொடரதான்போகிறோம். எங்களின் பிரதான கோரிக்கை என்பது இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)