தலித் மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய வன்னிய இளைஞர்கள்

/files/detail1.png

தலித் மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய வன்னிய இளைஞர்கள்

  • 4
  • 0

கடலூரில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை ஆணவ சாதியினர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூரில் அதிக அளவிலான வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களும், குறைந்த அளவிலான தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்துவருகின்றனர். இங்குப் பல நாட்களாகத் தலித் மக்கள் மீது வன்னியர்கள் ஆதிக்கத்தை செலுத்திருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று (நவம்பர் 14) தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவிட்டு அரசு பேருந்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தை வழிமறித்துப் பாதி வழியில் ஏறிய வன்னியர் இளைஞர்கள் வேண்டுமென்று தலித் மாணவிகளைச் சீண்டிச் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி, அந்த மாணவிகளின் கண்ணத்தில் அறைந்துள்ளனர். 

இதனையடுத்து பேருந்தில் நடந்ததுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு தலித் மக்கள் ஒன்று சேர்ந்து மாணவிகளைத் தாக்கிய இளைஞர்களை எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

Leave Comments

Comments (0)