தலித் மக்களின் குடியிருப்பைச் சூழ்ந்த தீண்டாமை சுவர்

/files/detail1.png

தலித் மக்களின் குடியிருப்பைச் சூழ்ந்த தீண்டாமை சுவர்

  • 0
  • 0

கடலூர் மாவட்டத்தில் தலித் மக்களின் குடியிருப்பைச் சுற்றி ஆணவ சாதியினர் தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், இருப்பு ஊராட்சிக்குட்பட்ட தெற்கிருப்பு கிராமம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் குடியிருக்கும் வடக்கு பகுதியில் பெரிய ஏரி இருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாதி இந்துக்களின் விவசாய நிலங்கள் இருக்கின்றன. அந்த விவசாய நிலங்களை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் புழங்கிக்கொண்டிருந்த மீதமிருந்த தெற்கு பகுதியில் தற்போது ஆணவ சாதியைச் சேர்ந்தவர் தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார். இதனைத் தடுக்க போராடிய தலித் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

alt text

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் அவர்கள் அந்த குடியிருப்பை விட்டு வெளியில் வரமுடியாமல் இருக்கின்றனர்.

விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 

Leave Comments

Comments (0)