அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய இரு காவலர்கள் கைது

/files/detail1.png

அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய இரு காவலர்கள் கைது

  • 0
  • 0

நெல்லையில் டிக்கெட் வாரண்ட் கேட்ட அரசுப் பேருந்து நடத்துநரை பேருந்துலையே வைத்துத் தாக்கிய இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (செப்டம்பர் 30) மாலை 4 மணியளவில் குமிலியிலிருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்குக் கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகிய இரண்டு பேரும் அந்த அரசு பேருந்தில் ஏறினர். அப்போது அந்த இரு காவலர்களிடம் அரசு பேருந்து நடத்துநரான ரமேஷ் வாரண்டியை காட்டும்படி கேட்டுள்ளார். வாரண்டி என்பது காவல்துறை சார்பில் காவலர்களுக்கு இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்வதற்குக் கொடுக்கப்படும் பயண அட்டையாகும். ஆனால் அந்த காவல்துறையினர் டிக்கெட்டும் எடுக்கவில்லை, வாரண்டியையும் காட்டவில்லை. இதனால் மீண்டும் ரமேஷ் காவலர்களிடம் வாரண்டியை கேட்டுள்ளார். 

இதில் கோபமடைந்த அந்த காவலர்கள் ரமேஷை தாக்கினர். ரமேஷின் முகத்திலிருந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து இதுதொடர்பாக காவல்நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மகேஷ் தமிழரசன் ஆகிய இரண்டு காவலர்கள் மீது  வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். காவலர்கள் தாக்கியதில் காயம் அடைந்த பேருந்து நடத்துனர் ரமேஷ் ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 

வீடியோவை பார்க்க

Leave Comments

Comments (0)