நாளை முதல் கோடை விடுமுறை

/files/detail1.png

நாளை முதல் கோடை விடுமுறை

  • 0
  • 0

-வித்யா

நாளை முதல் கோடை விடுமுறை!

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால்,  நாளை (ஏப்ரல் 21)  முதல் தமிழக பள்ளி  மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக ஏப்ரல் மாதம் இறுதி வரை பள்ளிகள் நடைபெறும். இந்த ஆண்டு  வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், 10 நாட்களுக்கு முன்னதாகவே அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு முடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை (ஏப்ரல் 21 ) ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

+1, +2 மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வுகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு  முடிவடைந்துள்ளது. 10 ஆம் வகுப்பு பொது தேர்வு இன்றோடு (ஏப்ரல் 20) முடிவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியிடப்படும். மீதமுள்ள வகுப்புகளுக்கு இன்றுடன் தேர்வுகள் முடிவடைந்துள்ளன.  

தமிழகத்தில் தனியார், நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரையில் தேர்வுகள் ஏற்கனவே முடிந்தது குறிப்பிடத்தக்கது.

\r\n

Leave Comments

Comments (0)