இடி, மின்னல், மழையா அழைக்கலாம் 108!

/files/detail1.png

இடி, மின்னல், மழையா அழைக்கலாம் 108!

  • 0
  • 0

-வித்யா

பல்வேறு மாநிலங்கள் இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருவதால், அவசர உதவிக்காக 108 ஐ அழைக்கலாம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்தப் புயலில் நூற்றுக்கணக்கான பேர் இறந்துள்ளனர். இந்நிலையில்  இந்திய வானிலை மையம், 'நாட்டின் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மே 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழையும், ஆலங்கட்டி மழையும்  பெய்யக்கூடும்' என அறிவித்திருந்தது.

இது குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்திய வானிலை மையம் நேற்று (மே 07) அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில் இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால், அவசர உதவிக்காக 108 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு அவசர உதவி பெறலாம். நாடு முழுவதும் எந்தப் பகுதியில் இருந்தும் இந்த எண்ணிற்குக் கைப்பேசி அல்லது லேன்லைன் மூலம்  அழைக்கலாம். அழைத்த 18 நிமிடங்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\r\n

Leave Comments

Comments (0)