பாபர் மசூதி தீர்ப்பு குறித்து சுவரொட்டி ஒட்டிய மூன்று பேர் கைது

/files/detail1.png

பாபர் மசூதி தீர்ப்பு குறித்து சுவரொட்டி ஒட்டிய மூன்று பேர் கைது

  • 0
  • 0

பாபர் மசூதி தீர்ப்பு அநீதியானது என்று சுவரொட்டி ஒட்டிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த முக்கிய தீர்ப்பைக் கடந்த நவம்பர் 09ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகிய ஐந்து பேரும் ஒரு மனதாக வழங்கியுள்ளனர்.

அந்த தீர்ப்பில்,”பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. மேலும் பாபர் மசூதி காலிமனையில் கட்டப்படவில்லை. அதனால் அந்த சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளுக்கு நிபந்தனையுடன் வழங்கவேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த 5 ஏக்கர் அளவில் மூன்று மாதங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட புதிய அறக்கட்டளை உருவாக்கப்பட வேண்டும். 3 மாதத்தில் அறக்கட்டளையை உருவாக்கவேண்டும். அறக்கட்டளையின் உறுப்பினர்களை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு நியமிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்புக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.  

இந்நிலையில் இன்று (நவம்பர் 15) கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மங்கலம் பேட்டையில் 'பாபர் மசூதி தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி, நீதிக்காகக் குரல் கொடுப்போம்` என்று  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சுவரொட்டியை ஒட்டினர். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் சுவரொட்டி ஒட்டிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். 

Leave Comments

Comments (0)