வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்

/files/detail1.png

வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்

  • 0
  • 0

\r\n
\r\n

-வித்யா

வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்

தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெளியின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து வெளியிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெளியில் வெளுத்துவங்குகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று(ஏப்ரல் 21) சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், " தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆந்திராவில் வீசும் வெப்பக்காற்றை பொறுத்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்திய அளவில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 90% அளவுக்கு மழை இருக்கும்.

மேலும் வெப்பச்சலனம் காரணமாக உள்தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

கன்னியாகுமரிராமநாதபுரம் கடற்பகுதிகளில்  இன்று கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இன்று முதல் நாளை இரவு பதினொன்றரை மணி வரை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று  இந்திய கடல்சார் மையம் தெரிவித்துள்ளது.

வெளியிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இன்று முதல் மே 31 வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

\r\n
\r\n
\r\n

Leave Comments

Comments (0)