ஈழத்தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்கிறது பாஜக- திருமுருகன் காந்தி

/files/detail1.png

ஈழத்தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்கிறது பாஜக- திருமுருகன் காந்தி

  • 0
  • 0

 

35ஆண்டுகளாக இங்கு இரண்டாம்தர குடிமக்களாக வாழக்கூடிய ஈழத்தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கிறார்கள்? என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இன்று (டிசம்பர் 26) சேப்பாக்கத்தில் இசைமுழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பேராசிரியர் சுந்தரவள்ளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே. பாலகிருஷ்ணன், திமுக எம்.பி. கணிமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய திருமுருகன் காந்தி, ”தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் இந்துக்கள் அல்ல. ஈழத்தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று பாஜக சொல்கிறது. அதனால்தான் அவர்களுக்கான குடியுரிமையை மறுத்துவருகிறார்கள். 

35ஆண்டுகளாக இங்கு இரண்டாம்தர குடிமக்களாக வாழக்கூடிய ஈழத்தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கிறார்கள். தமிழர்களையும் அவர்கள் இராண்டம்தர குடிமக்களாக நடத்திவருகிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள தேசிய இன மக்கள் மீது இதுபோன்ற ஒடுக்குமுறையை நிகழ்த்துகிறார்கள். பார்ப்பன பணியாட்களின் நாடாக இந்நாடு இருக்கிறது என்று தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் சொல்லியிருக்கிறார்கள். திரும்பவும் அந்த வரையறைக்குள் கொண்டு செல்ல விரும்புகிறார்கள் இந்துத்துவ மனுதர்மத்தின் அடிப்படை நாதமாக இருக்கக்கூடியவர்கள். இதை தகுதிப்படுத்தல் என்று முன்வைக்கிறார்கள். தகுதிப்படுத்தல் என்பது காலங்காலமாகப் பார்ப்பனியத்தின் சூழ்ச்சியாக இருக்கிறது. யார் யாரைத் தகுதிப்படுத்துவது. இந்த நிலம் எங்கள் நிலம். இந்த நிலத்தின் பூர்வக்குடி மக்கள் நாங்கள். யார் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று நாங்கள் சொல்கிறோம். 

உலகம் முழுவதும் நாடுகள் நாகரிகமடைந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவை இவர்கள் காட்டுமிராண்டி நாடாக மாற்ற விரும்புகிறார்கள். பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தைக் கொண்டு செலுத்த விரும்புகிறார்கள். இதை ஒரு போதும் நம்மால் அனுமதிக்கமுடியாது” என்று பேசினார்.

Leave Comments

Comments (0)