தலித் மக்களிடம் லட்சங்களைப் பறித்த காவலர்கள் உடையில் இருக்கும் திருடர்கள்

/files/detail1.png

தலித் மக்களிடம் லட்சங்களைப் பறித்த காவலர்கள் உடையில் இருக்கும் திருடர்கள்

  • 0
  • 0

மதுரை மாவட்டத்தில், தலித் மக்களிடம் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி லட்சக்கணக்கான பணத்தைப் பறித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முண்ணனியினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ளது ஊமச்சிகுளம் கிராமம். இந்த கிராமத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இதன் கட்டுமான பொருட்கள் சில திருட்டுப்போயிருக்கிறது. இதனைக் காரணமாக வைத்துக்கொண்டு ஊமச்சிகுளத்தில் உள்ள அம்பேத்கர் நகர் தலித் குடியிருப்பில் காவல்துறையினர் நுழைந்து அம்மக்களை விரட்டி சுமார் 20க்கும் மேற்பட்டோரை தனித்தனியாகக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நகை திருடியதாக அபாண்டமாக பழிசுமத்தி,கொடூரமாக, காட்டுமிராண்டிளைப் போல் தாக்கி அந்த தலித் மக்களிடம் பல லட்சங்களைக் கரந்திருக்கிறது.

இந்த தகவல் அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் ஊமச்சிகுளத்திற்கு சென்று இதுகுறித்து விசாரித்தனர். தலித் மக்கள் இழந்த தொகை அனைத்தையும் ஒன்றுவிடாமல் மீட்போம். காவலர்கள் உடையில் உள்ள கயவர்களைச் சட்டத்தின் துணை கொண்டு தண்டிப்போம் எனக் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். 

Leave Comments

Comments (0)