வன்முறையற்ற தமிழகத்தை உருவாக்க நடைபயணம் மேற்கோண்ட தோழர்களை கைது செய்திருக்கும் காவல்துறை

/files/detail1.png

வன்முறையற்ற தமிழகத்தை உருவாக்க நடைபயணம் மேற்கோண்ட தோழர்களை கைது செய்திருக்கும் காவல்துறை

  • 0
  • 0

 

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து பத்து நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு சென்னை கோட்டையில் மனு அளிக்க முயன்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

`வன்முறையற்ற தமிழகம்..போதையற்ற தமிழகம்' என்னும் முழக்கத்தோடு கடந்த பத்து நாட்களாக இரண்டு குழுக்கள் நானூறு கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள் இன்று (டிசம்பர் 04) சென்னையை அடைந்தனர்.

alt text

இந்நிலையில் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது `எங்களில் மூன்று தோழர்களை மட்டும் முதல்வரிடம் மனு அளிக்க அனுமதி கொடுங்கள்` என்று மாதர்சங்க தோழர்கள் கேட்டுள்ளனர். அதற்கு முதலில் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. பல கட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் அனுமதி அளித்த காவல்துறையினர் திடீரென்று மேலிடத்தில் அனுமதி வழங்க அனுமதிக்கவில்லை என்று தோழர்கள் மீது வன்முறையைச் செலுத்தி அவர்களின் கைகால்களை முறுக்கி நெஞ்சில் அடித்து, கைது செய்யப்பட்டு சண்முகம் சாலை அம்பேத்கர் திருமண மண்டபத்தில் காவல் வைக்கப்பட்டுள்ளனர்.

alt text

இதில் பல தோழர்கள் காயமடைந்திருக்கின்றனர். பலத்த காயமடைந்த ஆறு தோழர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

alt text

முறையான கோரிக்கைகளோடு மனு அளிக்கவந்த பெண்களைப் பெண் காவலர்களை விட்டே அடித்து உதைக்கும் இந்த அரசு யாருக்கான அரசு?

Leave Comments

Comments (0)