தலித் பள்ளி மாணவரின் ஆணவ படுகொலையைத் தற்கொலையாக மூடி மறைக்கும் காவல்துறை

/files/detail1.png

தலித் பள்ளி மாணவரின் ஆணவ படுகொலையைத் தற்கொலையாக மூடி மறைக்கும் காவல்துறை

  • 0
  • 0

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி கோபி காந்தி நகர் ஆற்றங்கரையில் உள்ள வேப்பமரத்தில் பிணமாகத் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோபியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  

கோபி செஞ்சி அருகே உள்ள ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்துப் பெண்ணை காதலித்ததாகவும், அப்பெண்ணின் மாமான்களான மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் கோபியை அடித்துக்கொலைசெய்து தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டமிட்ட சாதிய படுகொலைக்கு நீதி வேண்டி காவல்துறையில் புகார் அளித்தால், காவல்துறையினரோ சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நீலம் பண்பாட்டு மையம், எவிடென்ஸ் அமைப்பு & அவ்வூர் பொதுமக்கள் எனப் பலர் ஒன்றிணைந்து இவ்வழக்கினை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் வந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் K.ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு நேற்று முன்தினம் (அக்டோபர் 11) காந்தி நகருக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். 

“கோபி கடத்தி செல்லப்பட்டதையும், அடித்துத் துன்புறுத்தப்பட்டதையும் சிலர் நேரில் பார்த்துள்ளனர். இவர்களை காவல்துறை விசாரிக்க வில்லை. கோபியின் கிராமத்தில் 10 தலித் குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர். சுற்று வட்டார கிராமங்களிலும் குறைந்த அளவு தலித் குடும்பங்களே வசித்து வருகின்றனர். ஆனால் நங்கிலிகொண்டான், ராஜாம்புலியுர், ஜம்போதி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்னியர் குடும்பங்கள் வசிக்கின்றனர். இதனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாகத் தலித் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து செஞ்சி உட்கோட்ட காவல் துனைக்கண்கானிப்பாளர் நீதி ராஜிடம் இந்த ஆணவ படுகொலை குறித்து பாரபட்சமற்ற முறையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க மறுத்தால் நீதிமன்றத்தின் மூலம் உரியச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் செஞ்சி டிஎஸ்பியிடம் தெரிவித்துள்ளோம். தமிழக அரசு உடனடியாக இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று கள ஆய்வு மேற்கொண்ட வழக்கறிஞர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)