வழியை விட்டு நில்லுங்கள் என்று சொன்ன தலித் இளைஞரின் காலை உடைத்த காவல்துறையினர்

/files/detail1.png

வழியை விட்டு நில்லுங்கள் என்று சொன்ன தலித் இளைஞரின் காலை உடைத்த காவல்துறையினர்

  • 0
  • 0

திருச்சியில் சாலையை அடைத்து நின்றுகொண்டிருந்த காவல்துறையினர் சிலரை வழியை விட்டு நில்லுங்கள் என்று சொன்ன தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தி அவரின் காலை காவல்துறையினர் உடைத்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

திருச்சி பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் பிளம்பர் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு வேலைக்குச் சென்ற அவர் தனது மகளுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது உறையூர் காவல்நிலையம் முன்பு சில காவலர்கள் சாலையை அடைத்து நின்றுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஜெயகுமார் சிறிது வழியை விட்டு நில்லுங்கள் என்று கூறியிருக்கிறார். இதற்கு அந்த காவலர்கள், நாங்கள் யார் என்று தெரியுமா? எங்களையே வழியைவிட்டு நிற்கச் சொல்கிறாய் என்று ஜெயகுமாரை தாக்க தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் ஜெயகுமாரின் சாதி தெரிந்ததும், சாதிப் பெயரைக் கூறி இழிவாகப் பேசி, அவரது வாயில் மதுவை ஊற்றி அராஜகம் செய்த காவல்துறையினர் ஜெயகுமாரின் காலை உடைத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட ஜெயகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜெயக்குமாரைத் தாக்கிய காவல்துறையினர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஜெயகுமார் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
 

Leave Comments

Comments (0)