சங்பரிவார் தேச உருவாக்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிப் பொதுக்கூட்டம்

/files/detail1.png

சங்பரிவார் தேச உருவாக்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிப் பொதுக்கூட்டம்

  • 0
  • 0

எதிர்வரும் 7ஆம் தேதி சங்பரிவார் தேச உருவாக்கத்திற்கு எதிராகச் சென்னையில் மக்கள் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து 100க்கும் மேற்ப்பட்ட நாட்கள் கடந்த அதே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் விரோத திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து நம் நாட்டு மக்களுக்கு எதிரான திட்டங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. புதிய கல்விக் கொள்கை, அதிலிருக்கும் 5லிருந்து 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, காஷ்மீர் பிரச்னை, மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் நடந்தேறும் கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

இந்நிலையில் இந்துத்துவ கும்பலிடம் சிக்கித்தவிக்கும் தேசத்தை மீட்டெடுக்கவேண்டும் என்ற நோக்கில் “சங்பரிவார் தேச உருவாக்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிப் பொதுக்கூட்டம்” எதிர்வரும் 7ஆம் தேதி மாலை 6.30 மணிக்குச் சென்னையில் உள்ள மண்ணடியில் நடக்கவிருக்கிறது. இதில், தோழர்கள் தொல். திருமாவளவன், பேராசிரியர் சுந்தரவள்ளி, பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், வேல்முருகன், இல்யாஸ், சுப்பிரமணி ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.  
 

Leave Comments

Comments (0)