கொலை செய்யப்பட்ட தலித் சிறுமிக்கு ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது

/files/detail1.png

கொலை செய்யப்பட்ட தலித் சிறுமிக்கு ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது

  • 0
  • 0

பொது வெளியில் மலம் கழித்ததற்காகக் கொல்லப்பட்ட தலித் சிறுமிக்கு ஏற்கனவே பாலியல் தொந்தரவு நடைபெற்றதாகவும், அந்த தொந்தரவைக் கொடுத்தவர் தற்போது சிறுமியைக் கொலை செய்த ஹக்கீம் யாதவ்தான் என்றும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள பாவ்கேதி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் பால்மிகி. இவருடைய மகன் அவினாஷ் பால்மிகியும் (10), தங்கை  ரோஷனி பால்மிகியும் (12) கடந்த 18ஆம் தேதி காலை 6.30 மணிக்குப் பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகே உள்ள பொதுவெளியில் மலம் கழித்திருக்கின்றனர். இதைப் பார்த்த யாதவர் சாதியைச் சேர்ந்த ஹக்கீம் யாதவ் மற்றும் அவரது சகோதரர் ராமேஸ்வர் யாதவ் ஆகிய இருவரும் அந்த குழந்தைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  

குழந்தைகளைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய ஹக்கீம் யாதவ் மற்றும் அவரது சகோதரர் ராமேஸ்வர் யாதவ இருவர் மீதும் எஸ். சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர்.

alt text

இந்நிலையில், `ஒரு மாதத்துக்கு முன்னர், ரோஷினி அழுது கொண்டே வீட்டுக்கு வந்தாள். விசாரிக்கும்போது, ஹக்கீம் யாதவ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தான். நான், மறுத்த உடன் என்னைக் கீழே தள்ளிவிட்டு வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினான் என்று என்னிடம் கூறினாள்” என்று ரோஷினியின் அண்ணி செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர். 
 

Leave Comments

Comments (0)