ஐந்து மாவட்டங்களில் அனல் அதிகமாக இருக்கும்!

/files/detail1.png

ஐந்து மாவட்டங்களில் அனல் அதிகமாக இருக்கும்!

  • 4
  • 0

-வித்யா

ஐந்து மாவட்டங்களில் அனல் அதிகமாக இருக்கும்!

வேலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் பதிவாகும். இது இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகம் எனச் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே  வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால்  மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கூட வீட்டில் படுக்க முடியாததால் மக்கள் மாடியை நோக்கிப் படையெடுக்கின்றனர். இது மட்டுமல்லாமல் வருகிற 4 ஆம் தேதி கத்தரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது. இதனால் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (மே 02) சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், "வடக்கு திசை காற்றும், தெற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாகச் செல்வதால், கடந்த 24 மணி நேரத்தில் உள்மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வானூரில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யக்கூடும்.  திருத்தணி, வேலூரில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.அடுத்த 24 மணி நேரத்தில், வேலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரையில் அதிகபட்ச வெப்ப நிலையானது 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்" எனக் கூறினார்.

\r\n

Leave Comments

Comments (0)