இறந்த பசுவின் உடலை எடுத்துச்சென்ற துப்புரவுத் தொழிலாளி மீது தக்குதல் நடத்திய பாஜக தலைவர்

/files/detail1.png

இறந்த பசுவின் உடலை எடுத்துச்சென்ற துப்புரவுத் தொழிலாளி மீது தக்குதல் நடத்திய பாஜக தலைவர்

  • 0
  • 0

 

ராஜஸ்தான் மாநிலத்தில், இறந்த பசுவின் உடலை எடுத்துச்சென்ற துப்புரவுத் தொழிலாளி மீது பாஜக தலைவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டம், சங்கோடு நகராட்சித் தலைவராக இருப்பவர் தேவ்கினந்தன் ரத்தோர். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். நேற்று (அக்டோபர் 06) தலித் சமூகத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளியான ராஜ்குமார் வால்மீகி என்பவர் இறந்த பசுவின் உடலை டிராக்டரில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது `வால்மீகி இறந்த பசுவின் உடலை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்றுள்ளார்` என்று பாஜகவைச் சேர்ந்த ரத்தோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரத்தோர், வால்மீகியின் டிராக்டரை நிறுத்தி அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. ஆனால் காவல்துறையினர் அந்த வீடியோவை  நீக்கியுள்ளனர். 

இதுதொடர்பாக காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ரத்தோர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

”இறந்த பசுவின் உடலை எடுத்துச்செல்ல வேறு வசதி இல்லை என்பதால் டிராக்டரில் எடுத்துச் சென்றேன். நான் சந்தை பகுதியைக் கடக்கும்போது ரத்தோர் அங்கு வந்து என்னைத் தாக்கினார்” என்று வால்மீகி தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)