தமிழன் தொலைக்காட்சி ஊழியர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

/files/detail1.png

தமிழன் தொலைக்காட்சி ஊழியர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

  • 1
  • 0

தமிழன் தொலைக்காட்சி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கோரிக்கைகள்:

1 . அணைத்து ஊழியர்களையும் மரியாதையாக நடத்த வேண்டும்.

2. குறைந்த சம்பளமாவது 18000 ரூபாய் வழங்க வேண்டும்.

3. ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தில் பாதி தொகையாவது போனசாக அணைத்து ஊழியர்களுக்கும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் (வருகிற தீபாவளி உட்பட இக்கோரிக்கை).

4. காலை மதியம் வேலைகளை shift based time வேலைகளைப் பகிர்ந்து அளிக்கும்படி அணைத்து ஊழியர்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

5. தமிழன் தொலைக்காட்சியின் தமிழ் நாடு முழுவதும் செய்தியாளர்களின் கோரிக்கையாக உள்ள இடையில் நிறுத்தப்பட்ட காலை மற்றும் மதியம் செய்திகளை இனி தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய - அணைத்து ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

6. அலுவலகத்தின் பின்பு பலநாட்களாக மின்விளக்கு கிடையாது மின் விளக்குப் போடும்படி அணைத்து ஊழியர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

7. பல வருடங்களாகத் தமிழன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஊழியர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி அவர்களை வேலையை விட்டு அனுப்பியவர்களுக்குச் சரியான இழப்பீடு தொகையை அளித்து அவர்களது குடும்பங்களுக்கு உதவ வேண்டும்.

8. தமிழன் தொலைக்காட்சியின் தமிழ் நாடு முழுவதும் உள்ள செய்தி நிருபர்கள் கடந்த 17 வருட காலமாகச் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார்கள் அவர்களுக்குத் தகுந்த சம்பளம் அளிக்க வேண்டும் . .

உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்துக் கொட்டும் மழையிலும் தமிழன் தொலைக்காட்சி ஊடகத் தொழிலாளர்களின் போராட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருகிறது.

Leave Comments

Comments (0)