பாத்திமா லத்தீபின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்களின் போராட்டம்

/files/detail1.png

பாத்திமா லத்தீபின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்களின் போராட்டம்

  • 0
  • 0

 

மாணவி பாத்திமா லத்திபின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை ஐஐடி மாணவர்கள் இன்று (நவம்பர் 15) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஐஐடியில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்தவர் முதுகலை மாணவி பாத்திமா லத்தீப். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த இவர் கடந்த 9ஆம் தேதி ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.  தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பாத்திமா தற்கொலை செய்துகொண்டார் என்று முதலில் செய்திகள் பரவிவந்தது. ஆனால் அது புரளி என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்தி உணர்த்துகிறது. மாணவி பாத்திமாவின் செல்போனில் பாத்திமா, தான் இறப்பதற்கு முன்னர் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார். அதில், ”சென்னை ஐஐடி பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட மூன்று  பேர் தன்னை மத ரீதியாகத் துன்புறுத்தி மன உலைச்சல் ஏற்படுத்தினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவிவரும் மத வெறுப்பின் காரணமாக தமது மகள் உயிரிழந்திருக்கிறாள் என பாத்திமாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விசாரணை மேற்க்கொண்டுவருகிறார். 

இந்நிலையில் பாத்திமாவின் மரணத்திற்கு நீதிகேட்டு சென்னை ஐஐடி-யில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave Comments

Comments (0)