நாடெங்கும் உள்ள மாணவர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுத வேண்டும்- இந்திய மாணவர்கள் சங்கம்

/files/detail1.png

நாடெங்கும் உள்ள மாணவர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுத வேண்டும்- இந்திய மாணவர்கள் சங்கம்

  • 0
  • 0

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய அடூர் கோபாலகிருஷணன் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைக்  கண்டிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள மாணவர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுத வேண்டும் என இந்திய மாணவர்கள் சங்கம் அழைப்பு (SFI) விடுத்துள்ளது.

”எதிர்க்கும் குரல் இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது. அரசை விமர்சிப்பதால் மட்டும் ஒருவர் தேசத்துரோகி, அர்பன் நக்சல் என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. இந்திய அரசியலமைப்பு கருத்துச் சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குகிறது. நாட்டின் ஒரு குடிமகன் கூட தனது சொந்த நாட்டில் உயிர் பயத்தில் வாழும் நிலை கூடாது. இஸ்லாமிய மக்கள், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தோடு நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களை நிறுத்த வேண்டும்” என்று அடூர் கோபால  கிருஷ்ணன், மணிரத்னம், அபர்னா சென், அனுராக் காஷ்யாப், கொங்கொனா சென், சவுமிதா சாட்டர்ஜி, ராமச்சந்திர குஹா போன்ற 49 பேர் கடிதம் எழுதிக் கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு எதிராகப் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி சூர்யகாந்த் திவாரி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அக்டோபர் 03ஆம் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், “நாட்டில் அதிகரித்துவரும் கும்பல் கொலைகள், மாட்டுக்கறி படுகொலை, ஜெய்ஸ்ரீராம் உள்ளிட்ட விவகாரங்களை வைத்து பொதுமக்களைத் தாக்குவதைத் தடுத்து நிறுத்த கோரி மணிரத்னம், அடூர் கோபாலகிருஷணன் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். மோடிக்குக் கடிதம் எழுதியதற்கு 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள மாணவர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுத வேண்டும் என இந்திய மாணவர்கள் சங்கம் அழைப்பு (SFI) விடுத்துள்ளது.
 

Leave Comments

Comments (0)