ஐஐடி-ஹைதராபாத்தில் மாணவர் தற்கொலை- ஒரு வருடத்தில் மூன்றாவது தற்கொலை

/files/detail1.png

ஐஐடி-ஹைதராபாத்தில் மாணவர் தற்கொலை- ஒரு வருடத்தில் மூன்றாவது தற்கொலை

  • 0
  • 0

ஹைதாபாத்தில் உள்ள ஐஐடி-யில் பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர் இன்று (அக்டோபர் 29) கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

காவல்துறையினர் அளித்த தகவலின்படி, உயிரிழந்தவர் பிச்சிகல சித்தார்த் (20). ஹைதாபாத்தில் உள்ள ஐஐடி-யில் கணிப்பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் தற்கொலை செய்துகொண்டார். சித்தார்த் தற்கொலை செய்வதற்கு முன்னால் தனது நண்பர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், "மன அழுத்தத்தின் காரணமாகத்தான் இந்த முடிவை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை மனச்சோர்வைத் தருகிறது. துரதிர்ஷ்டவசமாக என்னால் மனதளவில் அந்த மன அழுத்தத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று அவர் அனுப்பிய மெயிலில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையின் சித்தார்த்தின் உடலை மீட்டு பாலாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் இது மூன்றாவது முறையாக நடக்கும் தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)