தென்னிந்திய மக்கள் நாடக விழா

/files/detail1.png

தென்னிந்திய மக்கள் நாடக விழா

  • 0
  • 0

 

எதிர்வரும் அக்டோபர் 2 முதல் 6ஆம் தேதி வரை  சென்னையில் தென்னிந்திய மக்கள் நாடக விழா நடைபெறுகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் சென்னை கேரள சமாஜம் இனைந்து ”தென்னிந்திய மக்கள் நாடக விழாவை” நடத்துகின்றனர். அக்டோபர் 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கேரள சமாஜியத்தில் நடைபெறுகிறது. 

இதில் நாடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், நாடக கலைஞர்கள் போன்றோர்களின் கருத்தரங்கமும் நடைபெறவிருக்கிறது. இதில், 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். வீதி சார்ந்த நாடகங்கள், மரபு சார்ந்த நாடகங்கள், சர்வ தேச நாடுகளில் நாடகங்கள் அரங்கேற்றும் நாடக  கலைஞர்கள் எனப் பலர் ஒரே மேடையில் நாடகம் நடத்துகின்றனர். நடிகர்கள் ரோகிணி, நாசர், விமல், குரு சோமசுந்தரம், கலைராணி போன்ற திரைக்கலைஞர்களும் நாடகத்தில் நடிக்கவுள்ளனர். அனுமதி இலவசம்.

Leave Comments

Comments (0)