தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது வழக்குப்பதிவு

/files/detail1.png

தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது வழக்குப்பதிவு

  • 0
  • 0

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஜூலை 7ஆம் தேதி பாண்டா பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 7 பேர் கொண்ட கும்பல் சுசீலாவை காரில் வைத்துக் கடத்தி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து சுசீலா மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்தார். நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னர் அப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது, எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஐபிசி பிரிவு 147, 148, 342, 504, 506 மற்றும் 376-ன் கீழ் கடந்த பைலானி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சிக்லோதி, கப்திகா, சிந்தன், நிவேச் நான்கு குற்றவாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
 

Leave Comments

Comments (0)