கடல் சீற்ற எச்சரிக்கை

/files/detail1.png

கடல் சீற்ற எச்சரிக்கை

  • 0
  • 0

-வித்யா

கடல் சீற்ற எச்சரிக்கை!

கடலோர மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடல் சீற்ற எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வெப்பச் சலனம் காரணமாகவும், கிழக்கு கடற்கரையை ஒட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் உள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த ஏப்ரல் 20ஆம்  தேதி முதல் கடலில் ஏற்பட்டுள்ள தொலைதூர சலனங்களால் கரையோரத்தில் கடல் அலைகள் அதிகமாகக் காணப்பட்டது. அந்தமான் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களை விட இன்று  3 மீட்டர் வரை அலைகள் அதிக அளவில் இருக்கும். இதனால், தென் தமிழக மீனவர்கள்  கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கோத்தகிரியில் அதிகபட்சமாக 3 செ.மீ., கொடநாட்டில் 1 செ.மீ.,  மழைப்பதிவாகி உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரு தினங்களுக்கு முன்னர்  ஆழ்கடலில் உள்ள பவள பாறைகளில் வசிக்கும் கடல் பாம்புகள் கடல் சீற்றத்தால்  தரை ஒதுங்கிது  குறிப்பிடத்தக்கது.  

\r\n

Leave Comments

Comments (0)